மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனைக்கு ஊடாக நாட்டிற்குள் நுழையும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (08ஆம் திகதி) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கைக்கு தென்கிழக்கே வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (08ஆம் திகதி) மாலை 4.00 மணியளவில் பொத்துவிலில் இருந்து சுமார் 230 கிலோமீட்டர் தென்கிழக்கே மையம் கொண்டிருந்தது.
இது தென்மேற்கு வங்கக்கடல் ஊடாக மேற்கு நோக்கி நகர்ந்து, இன்று (09ஆம் திகதி) ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனைக்கு இடையே இலங்கையின் கடற்கரையைக் கடக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று விடுத்த வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகுதி சூறாவளியாக மாறும் சாத்தியக்கூறுகள் குறைவாக இருந்தபோதிலும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாட்டிற்குள் நுழையும் போது மழைவீழ்ச்சியில் அதிகரிப்பு ஏற்படும் என பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக கிழக்கு, ஊவா, மத்திய, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும், சில இடங்களில் 150 - 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகலாம் என்றும் அவர் கூறினார். ஏனைய மாகாணங்களில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.
பதுளை பாடசாலைகள் இன்று சீக்கிரம் மூடப்பட்டன!
பதுளை மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் இன்று (09) முற்பகல் 11 மணிக்கு நிறைவடைந்தன என்று, ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) நேற்று மாலை விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அபாயகரமான சூழ்நிலையில் பாடசாலைகளை நடத்துவது பொருத்தமற்றது என கருதினால், வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன் கலந்துரையாடி அத்தகைய பாடசாலைகளை இன்று நடத்தாதிருக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


