தரத்திற்கும் இணையத்தள இணைப்புகளை (Web links) உட்படுத்துவதை முழுமையாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (09) உரையாற்றிய அவர், தேசிய கல்வி நிறுவனத்தின் கல்விசார் பேரவையினால் (Academic Affairs Board) இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
தற்போது இந்தத் தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ள இணையத்தளங்கள் மற்றும் ஏனைய மூலங்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லாதவை எனவும், அரச இணையத்தளங்களைப் பயன்படுத்தும் போது வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் கொள்முதல் தொடர்பான சிக்கல்கள் எழாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.


