Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

அரசியல் அரங்கையே அதிரவைக்கும் சட்ட உரிமைகள்!

T

The Leader Desk

ஜூன் 8, 2026 • 5:18 PM

அரசியல் அரங்கையே அதிரவைக்கும் சட்ட உரிமைகள்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • PTA, ICCPR மற்றும் அவசரகால சட்ட ஒழுங்குவிதிகள் மூலம் இந்நாட்டில் தோற்றுவிக்கப்பட்ட 'சித்திரவதை கலாசாரம்' குறித்து சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கடுமையான சாடல்!
  • "நபர் யார் என்பது முக்கியமல்ல, எந்தவொரு மனிதனுக்கும் அரசியலமைப்பின் 11 ஆவது உறுப்புரையின் பாதுகாப்பு கிடைக்கப் பெற வேண்டும்!" ஜனாதிபதிகள், அமைச்சர்கள், செயலாளர்கள் அல்லது பொலிஸ் உயரதிகாரிகள் அல்ல; தடுப்புக் காவலைத் தீர்மானிக்க வேண்டியது சுயாதீன நீதிபதிகள் மாத்திரமே!
  • அன்று இந்த அடக்குமுறைச் சட்டங்களைப் பாதுகாத்து, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்குப் பொறுப்பாக இருந்த சில நபர்களே இன்று அதே சட்டங்களினால் பாதிக்கப்படும் (Receiving end) விந்தையானதொரு அரசியல் தலைகீழ் மாற்றம் நாட்டிற்குள் உருவாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எழுத்து அளவு:
  • PTA, ICCPR மற்றும் அவசரகால சட்ட ஒழுங்குவிதிகள் மூலம் இந்நாட்டில் தோற்றுவிக்கப்பட்ட 'சித்திரவதை கலாசாரம்' குறித்து சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கடுமையான சாடல்!
  • "நபர் யார் என்பது முக்கியமல்ல, எந்தவொரு மனிதனுக்கும் அரசியலமைப்பின் 11 ஆவது உறுப்புரையின் பாதுகாப்பு கிடைக்கப் பெற வேண்டும்!"
  • ஜனாதிபதிகள், அமைச்சர்கள், செயலாளர்கள் அல்லது பொலிஸ் உயரதிகாரிகள் அல்ல; தடுப்புக் காவலைத் தீர்மானிக்க வேண்டியது சுயாதீன நீதிபதிகள் மாத்திரமே!

இலங்கையில் ஆட்சிக்கு வந்த அடுத்தடுத்த அரசாங்கங்களினால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA), சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்படிக்கைச் சட்டம் (ICCPR) மற்றும் அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகள் போன்ற கொடூரமான மற்றும் அடக்குமுறைச் சட்டங்கள் தன்னிச்சையாகத் தவறாகப் பயன்படுத்தப்பட்டமையை தாமும் தம்மோடுள்ள தரப்பினரும் தொடர்ச்சியாகக் கண்டித்து வந்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) முன்னாள் தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு மற்றும் அரசியல் துறைகளில் ஏற்பட்டு வரும் அதிரடி மாற்றங்கள் குறித்து அவதானம் செலுத்தி, தனது உத்தியோகபூர்வ முகநூல் (Facebook) கணக்கில் விசேட பதிவொன்றை இட்டுள்ள அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

அன்று இந்த அடக்குமுறைச் சட்டங்களைப் பாதுகாத்து, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்குப் பொறுப்பாக இருந்த சில நபர்களே இன்று அதே சட்டங்களினால் பாதிக்கப்படும் (Receiving end) விந்தையானதொரு அரசியல் தலைகீழ் மாற்றம் நாட்டிற்குள் உருவாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் விளையாட்டும் அரசியலமைப்பு உரிமையும்!

ஒரு நபர் தடுப்புக் காவலில் வைக்கப்பட வேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிகள், அமைச்சர்கள், செயலாளர்கள் அல்லது பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்ற நிறைவேற்று அதிகாரத் தரப்பினரிடம் ஒப்படைக்கப்படக் கூடாது என்றும், அது முற்றிலும் சட்டத்தின்படி செயற்படும் சுயாதீன நீதிபதிகளிடமே ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் சாலிய பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அடக்குமுறைச் சட்டங்களை நீக்குமாறு கோரிய சில தரப்பினர் கூட, பின்னர் ஆட்சிக்கு வந்ததும் அவற்றை நடைமுறைப்படுத்தியதையும், அவற்றின் மீது தங்கியிருந்த விதம் குறித்தும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

எவ்வாறாயினும், சம்பந்தப்பட்ட நபர் யாராக இருந்தாலும், அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் எவையாக இருந்தாலும், இலங்கை அரசியலமைப்பின் 11ஆவது உறுப்புரையின் (Article 11) மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மனித கண்ணியம், சட்டத்தின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தைப் பெறுவதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமையுள்ளது என்று ஜனாதிபதி சட்டத்தரணி நினைவூட்டியுள்ளார்.

அரசியலமைப்பினால் வழங்கப்படும் அந்தப் பாதுகாப்பு நபரினைக் பொறுத்தோ அல்லது நிலவும் அரசியல் சூழ்நிலைகளைப் பொறுத்தோ மாறுபட முடியாது என்றும், பொலிஸ் அல்லது சிறைச்சாலைத் தடுப்புக் காவலில் வைக்கப்படும் போது சித்திரவதைகளுக்கு உட்படுத்துவது, கொடூரமான, அமானுஷமான அல்லது அவமதிப்பான நடாத்துகைகளுக்கு (Torture, cruel, inhuman and degrading treatment) உள்ளாக்குவதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசியல் சதிக்குற்றச்சாட்டுகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி (Rule of Law) ஆகியவற்றுக்கு இடையே ஊசலாடிக்கொண்டிருக்கும் தற்போதைய இலங்கைச் சமூகத்திற்கு, சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்றும், அடக்குமுறை யார் பக்கம் திரும்பினாலும் அது அடக்குமுறைதான் என்பதையும் சுட்டிக்காட்டும் சாலிய பீரிஸின் இந்த அறிக்கை, தென்னிலங்கை அரசியல் மற்றும் சட்டத் துறையினர் மத்தியில் ஒரு மாபெரும் விவாதத்தை தோற்றுவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...