Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

செம்மணியில் மீட்கப்பட்ட மனித உடல்களின் எண்ணிக்கை 300ஐ தாண்டியது!

T

The Leader Desk

ஜூன் 8, 2026 • 6:33 AM

செம்மணியில் மீட்கப்பட்ட மனித உடல்களின் எண்ணிக்கை 300ஐ தாண்டியது!  

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அகழ்வாராய்ச்சிகளின் மூலம் கண்டெடுக்கப்பட்ட மனித உடல்களின் எண்ணிக்கை 300 ஐத் தாண்டியுள்ளது.
  • இப்புதைகுழியில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்ற 72 ஆவது நாளான ஜூன் 07 ஆம் திகதியும் 8 மனித உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டதுடன், அவற்றில் இரண்டு சிறுவர்களுடையது என அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
  • நேற்று முன்தினம் (06) செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியிலிருந்து 6 மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தன.
  • மூன்று வார கால ஓய்வின் பின்னர், இதன் அகழ்வுப் பணிகள் மீண்டும் 2026 ஜூன் மாதம் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.
எழுத்து அளவு:

அகழ்வாராய்ச்சிகளின் மூலம் கண்டெடுக்கப்பட்ட மனித உடல்களின் எண்ணிக்கை 300 ஐத் தாண்டியுள்ளது.

ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த அகழ்வாராய்ச்சிப் பணிகளைக் கண்காணித்து வரும், பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக முன்னிலையாகும் சட்டத்தரணிகள் குறிப்பிடுகையில், செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை அடையாளம் காணப்பட்ட 302 மனித உடல்களில் 298 உடல்கள் முழுமையாகத் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இப்புதைகுழியில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்ற 72 ஆவது நாளான ஜூன் 07 ஆம் திகதியும் 8 மனித உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டதுடன், அவற்றில் இரண்டு சிறுவர்களுடையது என அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர். நேற்று முன்தினம் (06) செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியிலிருந்து 6 மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தன.

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மேலதிக அகழ்வாராய்ச்சிப் பணிகளை முன்னெடுப்பதற்காக அரசாங்கத்திடமிருந்து 210 இலட்சம் ரூபாய் (21 மில்லியன்) நிதி கிடைத்ததைத் தொடர்ந்து, ஏழு மாத இடைவெளியின் பின்னர் 2026 ஏப்ரல் 27 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் யாழ்ப்பாணம் நீதவான் செல்வநாயகம் லெனின் குமார் முன்னிலையில் அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பமாகின.

எலும்புக்கூடுகளுடன் மீட்கப்பட்ட சிறுவர்களின் விளையாட்டுப் பொருட்கள்

இப்புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தொடர்ந்து 12 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், அகழ்வாராய்ச்சிக் குழுவினருக்கு ஓய்வு வழங்குவதற்காக மே 9 ஆம் திகதி சனிக்கிழமை தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போது 261 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டிருந்தன. மூன்று வார கால ஓய்வின் பின்னர், இதன் அகழ்வுப் பணிகள் மீண்டும் 2026 ஜூன் மாதம் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

நீதிமன்ற உத்தரவின் பேரில், தடையயல் தொல்பொருள் ஆய்வாளர் (Forensic Archaeologist) பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ், யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் அகழ்வாராய்ச்சிப் பணிகள் முதன்முறையாக 2025 மே 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியிலிருந்து மனித எலும்புகளுடன் இதுவரை தோண்டி எடுக்கப்பட்ட 100 க்கும் அண்மித்த தனிப்பட்ட பாவனைப் பொருட்களுள் (Artifacts) குழந்தைகளின் பால் புட்டிகள், பொம்மை உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்கள், சிறுவர்களின் பாதணிகள், பாடசாலைப் பைகள் மற்றும் சில நாணயங்களும் அடங்குகின்றன.

இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழியாகக் கருதப்படுவது 28 சிறுவர்கள் உட்பட 376 மனித உடற்பாகங்கள் மீட்கப்பட்ட மன்னார் சதொச (Sathosa) மனிதப் புதைகுழியாகும்.

chemmani bumi 06 08

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...