மணித்தியாலங்களுக்கு நாடு தழுவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
மருத்துவ பயிற்சி நியமனங்கள் (Internship appointments) தொடர்பாக சுகாதார அமைச்சு தமது சங்கத்துடன் இணங்கிய நிபந்தனைகளை மீறி, குறித்த நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுத்தமையே இந்தத் தீர்மானத்திற்கு காரணம் என சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை வருமாறு:
ஊடக அறிக்கை
வைத்தியர்களின் இடமாற்றச் செயல்முறையை அரசியல்மயமாக்கும் முயற்சிகள் காரணமாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
அதன்படி, ஜனாதிபதியின் தலையீட்டுடன் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கும் சுகாதார அமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடல் நாளை நடைபெறவிருந்தது. அந்தக் கலந்துரையாடல் முடியும் வரை சர்ச்சைக்கும் உரிய 'பயிற்சிக்கு பின்னரான வைத்தியர்களின்' (Post-internship doctors) இடமாற்றப் பட்டியலை நிறுத்தி வைக்க வேண்டும் என்பதே எட்டப்பட்ட உடன்பாடாகும்.
இருப்பினும், தற்போது குறித்த வைத்தியர்களுக்கான இடமாற்றப் பட்டியலை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. இது ஒரு பிரச்சினையை கலந்துரையாடல் மூலம் தீர்க்கும் செயல்முறையின் அடிப்படை கொள்கைகளை மீறும் செயலாகும்.
நம்பிக்கையின் அடிப்படையில் பிரச்சினையைத் தீர்க்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முயற்சிக்கும் ஒரு பின்னணியில், அந்த நம்பிக்கையை அப்பட்டமாக மீறி இந்தப் பட்டியலை வெளியிடுவது ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் மிகவும் ஒழுக்கமற்ற செயலாகும். சுகாதார அமைச்சர் நாட்டில் இல்லாத ஒரு நேரத்தில் இது நடந்திருப்பதை எவ்விதத்திலும் இலகுவாகக் கருத முடியாது.
இந்த நிலைமை குறித்து ஆராய்ந்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபை, நாளை அதாவது 09.04.2026 வியாழக்கிழமை காலை 08 மணி முதல் ஆரம்பமாகும் வகையில் 48 மணிநேர நாடு தழுவிய பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.
வெளியிடப்பட்ட இந்தப் பட்டியலை உடனடியாக நீக்கி பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நாளை காலை 08 மணி வரை அவகாசம் உள்ளது. அவ்வாறு செய்யத் தவறினால், பணிப்பகிஷ்கரிப்பினால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு சுகாதார அமைச்சர் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்தவர்கள் முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும்.


