வெட்டி காயம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தங்கோட்டுவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 06 ஆம் திகதி பகல் வேளையில் பாடசாலைக்குள்ளேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வெட்டுக்காயங்களுக்குள்ளான தங்கோட்டுவ - மாவத்தகம பகுதியைச் சேர்ந்த கே. கவிந்து நிம்சார (16 வயது) என்ற மாணவன் சிகிச்சைக்காக நீர்கொழும்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த மாணவனும் மற்றைய மாணவனும் தங்கோட்டுவ பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் ஒரே வகுப்பில் கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையில் பாடசாலையில் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வந்தமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
06ஆம் திகதி பகல் வேளையில் பாடசாலைக்குள் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்போது, ஒரு மாணவன் மற்றைய மாணவனின் கையை பேப்பர் கட்டரால் வெட்டி காயம் ஏற்படுத்தியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் வெளிப்படைந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
தங்கோட்டுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


