தணிப்பதற்கும் வழிவகுக்க வேண்டுமே தவிர, அங்கீகரிக்கப்படாத இராணுவ நடவடிக்கைகளை ஒருபோதும் சட்டப்பூர்வமாக்கக் கூடாது என சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) தொடர்பான வரைவுத் தீர்மானம் குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நேற்று (07) நடைபெற்ற வாக்கெடுப்பைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி ஃபு காங் (Fu Cong), இதனைத் தெரிவித்தார்.
பாதுகாப்புச் சபை தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்ய அனுமதிக்க முடியாது என்றும், மோதல்கள் தீவிரமடைவதற்கு வழிவகுக்கும் வகையில் பதற்றங்களை மேலும் அதிகரிக்க இடமளிக்க முடியாது என்றும் அவர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.
அன்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட ஹோர்முஸ் ஜலசந்தி குறித்த வரைவுத் தீர்மானத்திற்கு ஆதரவாக 11 வாக்குகள் கிடைத்தன. பாகிஸ்தான் மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
எனினும், பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர்களான சீனாவும் ரஷ்யாவும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த (Veto) காரணத்தினால், அந்த வரைவுத் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.


