Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

ஜப்பானில் இன்று பொதுத் தேர்தல்!

T

The Leader Desk

பிப்ரவரி 8, 2026 • 5:51 AM

ஜப்பானில் இன்று பொதுத் தேர்தல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வாக்காளர்கள் தயாராக உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
  • இம்முறை தேர்தலில் வாக்களிப்பதற்காக ஜப்பானின் 103 மில்லியன் வாக்காளர்கள் தயாராக உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
  • நாடு முழுவதும் 44,000 இற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் இந்த வாக்குப்பதிவு இடம்பெறவுள்ளது.
  • அவரது லிபரல் ஜனநாயகக் கட்சி (LDP) மற்றும் புகழ்பெற்ற ஜப்பானிய புத்தாக்கக் கட்சி (Japan Innovation Party) ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள கூட்டணியின் ஊடாக அவர் அதிகூடிய நாடாளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எழுத்து அளவு:

வாக்காளர்கள் தயாராக உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இம்முறை தேர்தலில் வாக்களிப்பதற்காக ஜப்பானின் 103 மில்லியன் வாக்காளர்கள் தயாராக உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாடு முழுவதும் 44,000 இற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் இந்த வாக்குப்பதிவு இடம்பெறவுள்ளது.

தேர்தலுக்கு முன்னைய கருத்துக்கணிப்புகளின்படி, ஜப்பானிய பிரதமர் சனாய் தகாச்சி (Sanae Takaichi) முன்னிலையில் உள்ளதாகத் தெரியவருகிறது. அவரது லிபரல் ஜனநாயகக் கட்சி (LDP) மற்றும் புகழ்பெற்ற ஜப்பானிய புத்தாக்கக் கட்சி (Japan Innovation Party) ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள கூட்டணியின் ஊடாக அவர் அதிகூடிய நாடாளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஒக்டோபர் மாதம், அப்போதைய பிரதமர் ஷிகெரு இஷிபா பதவியேற்று ஓராண்டு காலம் நிறைவடைவதற்கு முன்னரே பதவியிலிருந்து விலகியதை அடுத்து, சனாய் தகாச்சி ஜப்பானின் புதிய பிரதமராகப் பதவியேற்றார்.

நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை பலத்துடன் பிரதமராகப் பதவியேற்ற சனாய் தகாச்சி, ஜப்பானின் முதலாவது பெண் பிரதமர் என்ற வரலாற்றையும் படைத்திருந்தார். பிரதமர் பதவியேற்று மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில், அவர் அண்மையில் நாடாளுமன்றத்தைக் கலைத்து இந்த பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...