Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

ஏப்ரல் 29க்கு முன் ரணிலுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யத் தீர்மானம்!

T

The Leader Desk

பிப்ரவரி 8, 2026 • 5:21 AM

ஏப்ரல் 29க்கு முன் ரணிலுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யத் தீர்மானம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு, கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சட்டமா அதிபர் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் தற்போது நிலுவையிலுள்ள இந்த முறைப்பாட்டை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதிக்கு முன்னர் மேல் நீதிமன்றில் பாரப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
  • இதற்கமைய, எவ்வித தாமதமுமின்றி பிரதிவாதிகளுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, ஏப்ரல் 29 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்திற்கு அது குறித்து அறிவிக்குமாறு நீதவான் சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
  • இதேவேளை, இந்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபராகக் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இம்மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எழுத்து அளவு:

செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு, கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சட்டமா அதிபர் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் தற்போது நிலுவையிலுள்ள இந்த முறைப்பாட்டை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதிக்கு முன்னர் மேல் நீதிமன்றில் பாரப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பிரித்தானியாவின் வொல்வர்ஹாம்ப்டன் (Wolverhampton) பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவொன்றில் கலந்துகொள்வதற்காக மேற்கொண்ட தனிப்பட்ட வெளிநாட்டு விஜயத்தின் போது, 166 இலட்சம் ரூபாவிற்கும் அதிக அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டம் விளைவித்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பொதுச்சொத்துச் சட்டத்தின் கீழ், சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக் கோப்புகளை ஆய்வு செய்த பின்னர், பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகள் விரைவில் தயார் செய்யப்படவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த வழக்கினை ஒரு விசேட வழக்காகக் கருதி விசாரணை செய்வதற்கு, விசேட மேல் நீதிமன்ற மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாமை (Trial-at-Bar) நியமிக்குமாறு பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுக்க எதிர்பார்க்கப்படுவதாக, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமாரவிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, எவ்வித தாமதமுமின்றி பிரதிவாதிகளுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, ஏப்ரல் 29 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்திற்கு அது குறித்து அறிவிக்குமாறு நீதவான் சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபராகக் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இம்மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது கையெழுத்துப் பரிசோதனையை முன்னெடுப்பதற்காக, சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் அவரை அரசாங்க கையெழுத்துப் பரீட்சகரிடம் முன்னிலைப்படுத்தி அறிக்கை ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்கு நீதிமன்ற உத்தரவை கோரவுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த வழக்கின் முதலாவது சந்தேகநபரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான எழுத்துமூல சமர்ப்பணங்கள், அவரது சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணிகளினால் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஏப்ரல் 29க்கு முன் ரணிலுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யத் தீர்மானம்! | Tamil Leader | We Lead the Nation