Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

எப்ஸ்டீன் ஆவணங்களில் இலங்கையின் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் ஜெஃப்ரி பாவாவின் பெயர்!

T

The Leader Desk

பிப்ரவரி 8, 2026 • 5:16 AM

எப்ஸ்டீன் ஆவணங்களில் இலங்கையின் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் ஜெஃப்ரி பாவாவின் பெயர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆவணங்கள் வௌியிடப்பட்டுள்ள நிலையில், அதில் இலங்கையின் பெயர் 182 இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
  • 'எப்ஸ்டீன் கோப்புகள்' (Epstein Files) என அழைக்கப்படும் இந்த ஆவணங்களின் புதிய தொகுப்பு கடந்த ஜனவரி 30ஆம் திகதி வௌியிடப்பட்டது.
  • இதில் மூன்று மில்லியன் பக்கங்கள், 180,000 புகைப்படங்கள் மற்றும் 2,000 காணொளிகள் உள்ளடங்கியுள்ளன.
  • எவ்வாறாயினும், இந்த ஆவணங்களில் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதன் மூலம் அவர்கள் குற்றம் செய்தார்கள் என்று அர்த்தமாகாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

ஆவணங்கள் வௌியிடப்பட்டுள்ள நிலையில், அதில் இலங்கையின் பெயர் 182 இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இருப்பினும், இந்த ஆவணங்களில் எவ்விடத்திலும் அவர் இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்கள் தொடர்பில் அமெரிக்காவில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஜேப்ரி எப்ஸ்டீனின் வழக்குடன் தொடர்புடைய மில்லியன் கணக்கான புதிய ஆவணங்களை அமெரிக்க நீதிக் திணைக்களம் கடந்த வாரம் பகிரங்கப்படுத்தியது.

இதற்கமைய, எப்ஸ்டீனுடன் தொடர்புகளைப் பேணிய உலகின் அதி செல்வந்த மற்றும் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியல் மேலும் நீண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

'எப்ஸ்டீன் கோப்புகள்' (Epstein Files) என அழைக்கப்படும் இந்த ஆவணங்களின் புதிய தொகுப்பு கடந்த ஜனவரி 30ஆம் திகதி வௌியிடப்பட்டது. இதில் மூன்று மில்லியன் பக்கங்கள், 180,000 புகைப்படங்கள் மற்றும் 2,000 காணொளிகள் உள்ளடங்கியுள்ளன.

அத்துடன், பில்லியனர்களான ரிச்சர்ட் பிரான்சன், பில் கேட்ஸ், இலோன் மஸ்க் போன்ற உலகப் புகழ்பெற்ற நபர்களின் பெயர்களும் இதில் இடம்பெற்றுள்ளன. எவ்வாறாயினும், இந்த ஆவணங்களில் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதன் மூலம் அவர்கள் குற்றம் செய்தார்கள் என்று அர்த்தமாகாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், எப்ஸ்டீன் கோப்புகளில் 182 சந்தர்ப்பங்களில் இலங்கையைப் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. எப்ஸ்டீனுக்குச் சொந்தமான 'லிட்டில் செயின்ட் ஜேம்ஸ்' (Little Saint James) எனும் இரகசியத் தீவை நிர்மாணிப்பதற்காக, இலங்கையின் உலகப் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் ஜியோப்ரி பாவாவின் (Geoffrey Bawa) தனித்துவமான கட்டிடக்கலை பாணியைப் பின்பற்றுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மின்னஞ்சல் தரவுகளின்படி, எப்ஸ்டீனின் நெருங்கிய நண்பரான ஜூலியன் லீஸ் (Julian Lees) என்பவரால் ஜியோப்ரி பாவாவின் தனித்துவமான கட்டிடக்கலை வடிவமைப்புகள் அடங்கிய மின்னஞ்சல் ஒன்று எப்ஸ்டீனுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இயற்கையையும் கட்டிடங்களையும் ஒன்றிணைக்கும் பாவாவின் தனித்துவமான பாணியைத் தனது தீவில் மறுஉருவாக்கம் செய்வது குறித்து அவர்கள் நீண்ட கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக அந்த அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஜூலியன் லீஸ் என்பவர் 80-90 காலப்பகுதியில் பிரித்தானியாவின் பலம்வாய்ந்த ஆயுத வியாபாரியாக இருந்த டக்ளஸ் லீஸின் மகன் ஆவார். எப்ஸ்டீனின் ஆவணங்களில் ஜூலியன் லீஸ் வெறும் நண்பராக மாத்திரமன்றி, அவருடன் வர்த்தக ரீதியான கலந்துரையாடல்களை மேற்கொண்ட நெருங்கிய சகாக்களில் ஒருவராகவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

மேலும், ஜூலியன் லீஸ் நீண்ட காலமாக இலங்கையைத் தனது வசிப்பிடமாகக் கொண்டிருந்தமையும் இந்த அறிக்கைகளின் ஊடாகப் புலனாகியுள்ளது.

இருப்பினும், எப்ஸ்டீன் அல்லது ஜூலியன் லீஸ் இலங்கைக்குள் எவ்விதமான குற்றச் செயல்களிலும் ஈடுபட்டதாக இந்த ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை என்பதுடன், நாட்டின் பாதுகாப்புத் தரப்பினருக்கும் இது தொடர்பில் எவ்விதத் தகவல்களும் கிடைக்கப் பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

எப்ஸ்டீன் ஆவணங்களில் இலங்கையின் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் ஜெஃப்ரி பாவாவின் பெயர்! | Tamil Leader | We Lead the Nation