அபாயங்களை (Systematic Risk) உருவாக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
துறைமுக நகர ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ அமரசேகர நியமிக்கப்பட்டதை வரவேற்று உரையை ஆரம்பித்த அவர், முதலீட்டுச் சபைக்கு (BOI) கடந்த நான்கு ஆண்டுகளாக பணிப்பாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்படாமை குறித்து அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தார்.
வங்கிச் சட்டத்தை மீறுதலும் நிழல் வங்கி முறைமையும் திருத்தப்பட்ட சட்டத்தின் 421 வது பிரிவின் கீழ், துறைமுக நகரத்தில் வெளிநாட்டு வங்கி நடவடிக்கைகளுக்கு (Offshore Banking) இதுவரை நடைமுறையிலிருந்த வங்கிச் சட்டத்தின் விதிகள் இனி செல்லுபடியாகாது என முஸ்தபா சுட்டிக்காட்டினார். முன்னதாக வங்கிச் சட்டத்தின் கீழ் மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட வங்கி உரிமங்கள், இந்தத் திருத்தத்தின் பின்னர் துறைமுக நகர ஆணைக்குழுவினால் வழங்கப்படும்.
இவ்வாறான உரிமங்களை வழங்குவதற்குத் தேவையான நிபுணத்துவம் ஆணைக்குழுவிடம் உள்ளதா எனக் கேள்வி எழுப்பிய அவர், இதன் மூலம் ஒரு 'நிழல் வங்கி முறைமை' (Shadow Banking System) உருவாகும் அபாயம் உள்ளதாக எச்சரித்தார். அத்துடன், துறைமுக நகரத்தில் இயங்கும் வெளிநாட்டு வங்கிகள் உள்நாட்டு வங்கிகளிடமிருந்து டொலர்களைக் கடனாகப் பெற முடிவது, நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மற்றும் உள்நாட்டு வங்கி முறைமைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மூலதனப் போதுமான தன்மையும் மத்திய வங்கியின் பங்கும் இதுவரை உள்நாட்டு வங்கி முறைமையைப் பாதுகாப்பதற்காக மத்திய வங்கி சர்வதேச 'பாசல்' (Basel) தரநிலைகளை விட அதிகமான மூலதனப் போதுமான விகிதத்தை (10%) பேணி வந்த போதிலும், புதிய திருத்தத்தின் கீழ் சர்வதேச தரநிலைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படுவது ஒரு தெளிவற்ற நிலையை உருவாக்கும் என அவர் கூறினார். வங்கி உரிமம் வழங்கும் அதிகாரத்தை ஆணைக்குழுவிடம் ஒப்படைத்து, மத்திய வங்கியின் மேற்பார்வை அதிகாரத்தை மட்டுப்படுத்துவது வங்கி முறைமைக்கு ஆபத்தானது என அவர் வலியுறுத்தினார்
வரிச் சுமையும் மூளைசாலிகள் வெளியேற்றமும் துறைமுக நகரத்தில் பணிபுரியும் இலங்கையர்கள் 36 வீதம் போன்ற அதிக வருமான வரியைச் செலுத்த வேண்டியிருப்பது, திறமையான இளைஞர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் 'மூளைசாலிகள் வெளியேற்றத்தை' (Brain Drain) அதிகரிக்கும் என முஸ்தபா சுட்டிக்காட்டினார். துபாய் போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை முதலீடுகளுக்குப் பொருத்தமானதாக இல்லை என்றும், மின்சாரம் மற்றும் தொழிலாளர் செலவுகள் இங்கு அதிகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் உள்நாட்டு முதலீட்டாளர்களும் ஊக்குவிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், ரியல் எஸ்டேட் துறையில் ஒரு திட்டத்தை ஆரம்பிக்க சுமார் 21 நிறுவனங்களின் அனுமதியைப் பெற வேண்டியிருப்பதால், உள்நாட்டு வர்த்தகர்கள் விரக்தியடைந்து துபாய் போன்ற நாடுகளில் முதலீடு செய்வதாகத் தெரிவித்தார். துறைமுக நகர ஆணைக்குழுவிடம் விண்ணப்பம் ஒன்றைச் சமர்ப்பித்த பின்னர் அதனை ஏற்றுக்கொள்வதற்கோ அல்லது நிராகரிப்பதற்கோ ஒரு குறிப்பிட்ட கால எல்லை இல்லை என்பதும் முதலீட்டாளர்களுக்குப் பெரும் தடையாக உள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.
இறுதியாக, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிபந்தனைகளில் மட்டும் தங்கியிருக்காமல், இலங்கையை பிராந்திய ரீதியில் முதலீட்டாளர்களுக்குச் சாதகமான நாடாக மாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பைசர் முஸ்தபா மேலும் தெரிவித்தார்.


