Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

சலேவை பார்க்க CIDக்குச் சென்ற மனைவி கண்ணீருடன் கூறிய உருக்கமான கதை!

T

The Leader Desk

ஜூன் 7, 2026 • 5:41 AM

சலேவை பார்க்க CIDக்குச் சென்ற மனைவி கண்ணீருடன் கூறிய உருக்கமான கதை!  

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதற்கு நன்றிக்கடன் செலுத்துவதற்கான நேரம் தற்போது மக்களுக்கு வந்துள்ளது என்றும் முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சலேயின் மனைவி தெரிவித்துள்ளார்.
  • தடுப்புக் காவல் உத்தரவின் (Detention Order) கீழ் வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சலேயை பார்ப்பதற்காக இன்றைய தினம் (07) அவரது மனைவி, மகன் மற்றும் சகோதரர் ஆகியோர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குச் சென்றிருந்தனர்.
  • எப்போதும் நாட்டிற்காகவே அர்ப்பணிப்புடன் இருந்தார்.
எழுத்து அளவு:

அதற்கு நன்றிக்கடன் செலுத்துவதற்கான நேரம் தற்போது மக்களுக்கு வந்துள்ளது என்றும் முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சலேயின் மனைவி தெரிவித்துள்ளார்.

மரணாந்திக உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள சுரேஷ் சலேயை பார்ப்பதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) வந்திருந்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்புக் காவல் உத்தரவின் (Detention Order) கீழ் வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சலேயை பார்ப்பதற்காக இன்றைய தினம் (07) அவரது மனைவி, மகன் மற்றும் சகோதரர் ஆகியோர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குச் சென்றிருந்தனர்.

அங்கு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சுரேஷ் சலேயின் மனைவி:

"எனது கணவர் நிரபராதி என்பது அனைவருக்கும் தெரியும் என்றே எனக்குக் கூற வேண்டியுள்ளது. அவருக்கு இவ்வாறு செய்வது முற்றிலும் அநீதியானது. ஏனெனில், இந்த நேரத்தில் அவரை ஒரு பலிக்கடாவாக (Scapegoat) ஆக்கியிருப்பது நன்றாகவே தெரிகிறது. மிக அநாகரிகமான முறையில், கொடூரமாக அவர் நடத்தப்பட்டுள்ளதாக சட்ட மருத்துவ அதிகாரியின் (JMO) அறிக்கையிலும் கூறப்பட்டுள்ளது. அவர் தற்போது மரணாந்திக உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். அதனை எவ்வகையிலும் கைவிட அவர் தயாராக இல்லை. அவரது மனதை மாற்ற நாம் எவ்வளவோ பேசிப் பார்த்தோம். ஆனால், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு (PTA) எதிராகவே தான் இதனைச் செய்வதாக அவர் கூறுகிறார். அவர் நிரபராதி என்பது எமக்குத் தெரியும். விசாரணைகளை மேற்கொள்ள முடியும், ஆனால் மனிதநேயத்துடன் நடத்த வேண்டும் அல்லவா? அவர் மிகவும் அநாகரிகமான முறையிலேயே நடத்தப்பட்டுள்ளார்.

"முப்பது வருடங்களாக நாட்டிற்காகவே வாழ்ந்தார்; இப்போது மக்களுக்கான நேரம்"

"எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. முப்பத்தெட்டு வருடங்கள் இந்த நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அவர், எமது பிள்ளைகளின் பாடசாலை நிகழ்வொன்றிற்கு கூட வந்ததில்லை. எப்போதும் நாட்டிற்காகவே அர்ப்பணிப்புடன் இருந்தார். அத்தகைய ஒரு மனிதருக்கு இவ்வாறு செய்வது பெரும் அநீதியாகும். இந்த மோசமான நடாத்துகைக்கு யார் பொறுப்புக்கூற வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். எனது கணவரை நினைத்து மிகவும் வேதனையடைகிறேன், ஆனால் அவர் தனது உண்ணாவிரதத்தைக் கைவிடப் போவதில்லை.

நாட்டிற்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருந்த ஒரு மனிதன் அவர். இவ்வாறான அநீதிக்கு எதிராக அவர் எப்போதும் நிமிர்ந்து நிற்பார். எப்போதும் நேர்மையாக, முதுகெலும்புடன் வாழ்ந்த மனிதர் அவர். எனது கணவர் குறித்து நான் பெருமையடைகிறேன். அவருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுவதற்கு முன்னர், எப்படியாவது அவரை ஒரு வைத்தியசாலைக்காவது கொண்டு சேர்க்க முடிந்தால் அதுவே பெரிய விடயம். அவர் இருக்கும் மனநிலையில் 'என்னை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுங்கள்' என்று அவராகக் கூற மாட்டார். எனவே, பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகள் சரியானதைச் செய்ய வேண்டும். அவரது உயிரைக் காப்பாற்றிக் தாருங்கள் என்றுதான் நான் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.

சுரேஷ் இந்த நாட்டிற்காக உழைத்தது போல, இப்போது சுரேஷிற்காக நீங்கள் எழுந்து நிற்க வேண்டிய தருணம் இதுவாகும். அவரால் முப்பது வருடங்களுக்கும் மேலாகத் தனது முழு வாழ்க்கையையும் நாட்டிற்காக அர்ப்பணிக்க முடிந்ததென்றால், இது உங்களுக்கான சந்தர்ப்பம். உண்மை என்னவென்று உங்களுக்குத் தெரியும். சுரேஷிற்காக நீங்கள் முன்வாருங்கள், நான் இதையே கேட்டுக்கொள்கிறேன்"

எனக் கண்ணீர் மல்கக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...