Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமை குறித்து வெளிவிவகார அமைச்சு அறிக்கை!

T

The Leader Desk

மே 7, 2026 • 4:41 AM

மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமை குறித்து வெளிவிவகார அமைச்சு அறிக்கை!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நெருக்கடியான நிலைமை குறித்து இலங்கை தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.
  • பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் முக்கிய எரிசக்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்தும் இலங்கை கவலை தெரிவித்துள்ளது.
  • பொதுமக்களின் பாதுகாப்பு, சிவில் உட்கட்டமைப்புகள் மற்றும் அத்தியாவசிய உலகளாவிய விநியோகச் சங்கிலிகளின் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக இலங்கை உறுதியாக நிற்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

நெருக்கடியான நிலைமை குறித்து இலங்கை தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.

பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் முக்கிய எரிசக்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்தும் இலங்கை கவலை தெரிவித்துள்ளது.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை சமூகம் உட்பட கணிசமான எண்ணிக்கையிலான சர்வதேச புலம்பெயர்ந்தோர் இப்பிராந்தியத்தில் வசிப்பதாகவும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் இலங்கைக்கு மிகவும் முக்கியமான விடயமாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பு, சிவில் உட்கட்டமைப்புகள் மற்றும் அத்தியாவசிய உலகளாவிய விநியோகச் சங்கிலிகளின் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக இலங்கை உறுதியாக நிற்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெருக்கடியான நிலைமை தீவிரமடைவதைத் தவிர்க்கும் வகையில் அனைத்துத் தரப்பினரும் மிகுந்த நிதானத்துடன் செயற்படுமாறும், பயனுள்ள பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுமாறும் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...