Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்: திட்டமிட்டபடி இன்று பதவியேற்பு விழா இல்லை!

T

The Leader Desk

மே 7, 2026 • 2:40 AM

ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்: திட்டமிட்டபடி இன்று பதவியேற்பு விழா இல்லை!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆனால், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதம் வழங்காததால், இன்று நடைபெறுவதாக இருந்த பதவி ஏற்பு விழா தள்ளிப்போகிறது.
  • தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள ‘தமிழக வெற்றிக் கழகம்' (தவெக), தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைப்பதற்கானப் பணிகளில் இறங்கியுள்ளது.
  • அறுதிப் பெரும்பான்மைக்கு இன்னும் 12 இடங்கள் தேவைப்படும் நிலையில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவைத் தவெக கோரியிருந்தது.
  • இந்நிலையில், பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்துக்கு வருகை தந்த தவெக தலைவர் விஜய், நேற்று பிற்பகல் 1 மணியளவில் மூத்த நிர்வாகிகளான செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், அருண்ராஜ் மற்றும் வெங்கடரமணன் ஆகியோருடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.
எழுத்து அளவு:

ஆனால், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதம் வழங்காததால், இன்று நடைபெறுவதாக இருந்த பதவி ஏற்பு விழா தள்ளிப்போகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள ‘தமிழக வெற்றிக் கழகம்' (தவெக), தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைப்பதற்கானப் பணிகளில் இறங்கியுள்ளது.

அறுதிப் பெரும்பான்மைக்கு இன்னும் 12 இடங்கள் தேவைப்படும் நிலையில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவைத் தவெக கோரியிருந்தது.

இதில் முதற்கட்டமாக காங்கிரஸ் கட்சி தவெக ஆட்சி அமைக்க நிபந்தனையுடன் தனது முழு ஆதரவை வழங்கியுள்ளது. மீதமுள்ள இடங்களுக்காக மற்ற கட்சிகளுடன் தவெக நிர்வாகிகள் இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்துக்கு வருகை தந்த தவெக தலைவர் விஜய், நேற்று பிற்பகல் 1 மணியளவில் மூத்த நிர்வாகிகளான செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், அருண்ராஜ் மற்றும் வெங்கடரமணன் ஆகியோருடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்தக் கூட்டத்தில், ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளின் நிபந்தனைகளை எப்படிக் கையாள்வது, அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளுக்குப் பங்களிப்பு வழங்குவது மற்றும் பதவியேற்பு விழா குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது, காங்கிரஸ் குழுவினர் நேரில் வந்து தமது ஆதரவு கடிதத்தை விஜய்யிடம் வழங்கினர்.

ஆலோசனை முடிந்து பிற்பகல் 3 மணியளவில் பனையூர் அலுவலகத்தில் இருந்து விஜய் புறப்பட்டார். சரியாக 3.30 மணிக்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை அவர் அடைந்தார். அங்கு ஆளுநரின் செயலர் கிர்லோஷ் குமார் பூங்கொத்து கொடுத்து விஜய்யை வரவேற்றார்.

தொடர்ந்து, தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகரைச் சந்தித்த விஜய்க்கு, ஆளுநர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர், 108 சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கடிதத்துடன், ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை ஆளுநரிடம் விஜய் முறைப்படி சமர்ப்பித்தார்.

புதிய அரசு அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆளுநருடன் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

ஆளுநர் உடனடியாக ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு முக்கிய சட்ட நடைமுறையை ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

அதாவது, த.வெ.கவுக்கு ஆதரவு அளிக்கும் 118 எம்.எல்.ஏக்கள் அடங்கிய பெயர் பட்டியல் மற்றும் அவர்களின் கையொப்பம் அடங்கிய கடிதத்தை முழுமையாகச் சமர்ப்பிக்குமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்தப் பட்டியலை ஆய்வு செய்த பிறகே, முறைப்படி ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியும் என்று ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

தவெகவை பொறுத்த வரை பதவி ஏற்பு விழாவை முடித்துவிட்டு, அதன்பிறகு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் வழங்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால், ஆளுநர் முழு பட்டியலையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்ததால், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று 7ஆம் திகதி விஜய் முதல்வராகப் பதவியேற்கும் நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடைபெறாமல் தள்ளிப்போகிறது. எனினும் விழாவுக்கான மேடை அமைக்கும் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஆளுநர் எம்.எல்.ஏக்களின் முழு பட்டியலைக் கேட்டுள்ளதால், அதை தயாரித்து வழங்கும் பணிகளில் தவெக தலைமை தீவிரமாக இறங்கியுள்ளது. ஆளுநர் மாளிகையில் இருந்து திரும்பிய விஜய், பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

கூட்டணிக் கட்சிகளிடம் இருந்து ஆதரவு கடிதங்களைப் பெற்று, ஓரிரு தினங்களில் முழு பட்டியலையும் ஆளுநரிடம் வழங்க அக்கட்சி திட்டமிட்டுள்ளது.

பட்டியல் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, ஆளுநரின் அழைப்பு எப்போது வரும்? அடுத்தகட்டமாகப் பதவியேற்பு விழா எந்தத் தேதியில் அமையும் என்பது குறித்து விரைவில் தெரிவிக்கப்படும் என்று தவெக தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், விஜய் தனது கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் சட்ட ஆலோசனைக் குழுவினருடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

அதன்பின்னர் நேற்று இரவு தவெக சட்ட ஆலோசனைக் குழுவினர் கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநரை 2-வது முறையாகச் சந்தித்துப் பேசினர்.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, ஆட்சி அமைப்பதில் உள்ள சட்ட நுணுக்கங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...