2024 பெப்ரவரி 29ஆம் திகதிக்குப் பின்னர், டொலரின் சராசரி பெறுமதி 310 ரூபாய் எல்லையைத் தாண்டிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இதேவேளை, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (07) நாளாந்த மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 306.28 ரூபாயாகவும், விற்பனை விலை 313.81 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 5.6% இனால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி முன்னதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


