கையெழுத்திடப்பட்டுள்ளது.
"விவசாய பசுமை முயற்சி - நிலையான விவசாய நடைமுறைகள் ஊடாக பசுமைப் பொருளாதார வளர்ச்சி" (Agri-Green Initiative) எனும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சு, ரப்பர் அபிவிருத்தி திணைக்களம், இலங்கை ரப்பர் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன இணைந்து இத்திட்டத்தைத் தயாரித்துள்ளன. இதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் 8 மில்லியன் யூரோ முழுமையான நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
நிலையான நுகர்வு மற்றும் உற்பத்தி நடைமுறைகளை ஊக்குவிப்பதோடு, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் பசுமைப் பொருளாதார வளர்ச்சியை நோக்கி இலங்கையை மாற்றுவதற்கு ஆதரவளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். அத்துடன், இளைஞர்கள் மற்றும் பெண்கள் மீது விசேட கவனம் செலுத்தி, ரப்பர் துறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உற்பத்தி சங்கிலிகளில் சூழல் நட்பு விவசாய நடைமுறைகளை ஊக்குவிப்பதும் இதன் முக்கிய குறிக்கோளாகும்.
இந்த ஒப்பந்தம் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும (Dr. Harshana Suriyapperuma) மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய ஒத்துழைப்புத் தலைவர் கலாநிதி ஜொஹான் எச். ஹெஸ் (Dr. Johann H. Hesse) ஆகியோரால் உத்தியோகபூர்வமாக பரிமாறப்பட்டது.
இங்கு கருத்துத் தெரிவித்த நிதி அமைச்சின் செயலாளர், ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் இந்த ஒத்துழைப்புக்கு நன்றிகளைத் தெரிவித்ததோடு, இத்திட்டமானது இலங்கையின் நிலையான அபிவிருத்தி இலக்குகளுடனும் ஏற்றுமதி சந்தையை மேம்படுத்தும் தேசிய முயற்சிகளுடனும் ஒத்துப்போவதாகக் குறிப்பிட்டார்.


