Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

'சாரா ஜஸ்மின் உயிரோடு இருக்கிறார்'; 'அப்படியென்றால் ஏன் பிடியாணை பிறப்பிக்கவில்லை?'

T

The Leader Desk

ஜனவரி 7, 2026 • 8:39 AM

'சாரா ஜஸ்மின் உயிரோடு இருக்கிறார்'; 'அப்படியென்றால் ஏன் பிடியாணை பிறப்பிக்கவில்லை?'

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
  • நாடாளுமன்றத்தில் இன்று (07) உரையாற்றும் போதே இதனை தெரிவித்திருந்தார்.
  • இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தொடர்பில் சாராஜஸ்மின் தொடர்பாக 2020 ஆம் ஆண்டின் பின்னர் கோட்டபாஜ ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்குழு தெரிவிக்கின்ற விடயம் சாரா ஜஸ்மின் இறந்துள்ளார் என்பது.
  • ஆனால் அனைவருக்கும் தெரியும் சாராஜஸ்மின் இறக்கவில்லை.
எழுத்து அளவு:

பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (07) உரையாற்றும் போதே இதனை தெரிவித்திருந்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேட்ட கேள்விக்கு பதலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து பேசிய அவர், 'சாரா ஜஸ்மின் மரணமடைந்து விட்டதாகவே குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் இந்தியாவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட கருத்தில் எவ்வித உண்மையும் இல்லை. அவர் தொடர்பில் தீவிர விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. சில தகவல்களை வெளிப்படுத்த முடியாது. அவை மேலதிக விசாரணைகளுக்கு தடங்கல்களை ஏற்படுத்தலாம்' என்றும் குறிப்பிட்டிருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றவாளியான சாராஜஸ்மின் இறக்கவில்லை. அப்படியென்றால் அவர் தப்பித்துச் சென்றுள்ளார். இவ்வாறு இருக்க அவருக்கு ஏன் நீங்கள் திறந்த பிடியாணை பிறப்பிக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வியெழுப்பியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாய்மொழி முல வினாக்களின் போது மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தொடர்பில் சாராஜஸ்மின் தொடர்பாக 2020 ஆம் ஆண்டின் பின்னர் கோட்டபாஜ ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்குழு தெரிவிக்கின்ற விடயம் சாரா ஜஸ்மின் இறந்துள்ளார் என்பது. ஆனால் அனைவருக்கும் தெரியும் சாராஜஸ்மின் இறக்கவில்லை. அவர் தப்பித்துச் சென்றுள்ளார். அவர் தப்பித்துச் செல்ல ஏதேவொரு குழு உதவியுள்ளது.

சாராஜஸ்மின் இறக்கவில்லை என்பதை உங்களுடைய அரசாங்கமும் ஏற்றுக்கொண்டது. அவர் இந்தியாவில் இருப்பதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கையில் அவரை அழைத்து வருவதற்கு ஏன் சாராஜஸ்மினுக்கு திறந்த பிடியாணை இன்னும் பிறப்பிக்கவில்லை என்று கேள்வியெழுப்பிள்ளார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவிக்கையில்,

உயிர்த்தஞாயிறு தொடர்பாக புலனாய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சாராஜஸ்மின் இறக்கவில்லை என்ற தகவல் நிரூபணமாகியுள்ளது. சாராஜஸ்மின் இந்தியாவில் இருப்பதாக எமக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. புலனாய்வு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பான முன்னைய தகவல்படி நீதிமன்ற நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஒரு சூழ்ச்சி இடம்பெற்றிருக்கின்றதா என்பது தொடர்பான விசாரணைகள் புதிய அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

புலனாய்வுப்பிரிவின் ஆழமான விசாரணகளுக்கு தடங்கல்கள் ஏற்படும் என்பதால் பாராளுமன்றத்தில் இது தொடர்பில் சில தகவல்களை முன்வைக்கவில்லை. தேவைப்படின் சாராஜஸ்மினுக்கு பிடியாணை கோருவதற்கு எதிர்ப்பார்க்கின்றோம் என்று தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...