Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

'எந்த நாடும் சர்வதேச சட்டத்தையும் ஐ.நா சாசனத்தையும் மீறிச் செயற்பட முடியாது!'

T

The Leader Desk

ஜனவரி 7, 2026 • 8:29 AM

'எந்த நாடும் சர்வதேச சட்டத்தையும் ஐ.நா சாசனத்தையும் மீறிச் செயற்பட முடியாது!'

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முடியாது என அமெரிக்க ஜனாதிபதி, வெனிசியூலாவை ஆக்கிரமித்து, அதன் ஜனாதிபதியை சிறை பிடித்துள்ளதை வன்மையாகக் கண்டித்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
  • இன்றைய பூகோள அரசியலில் தற்காலிகமாக மேலோங்கியுள்ள வளங்களை சுரண்டுவதற்கான பேராசை, சர்வதேச சட்ட நெறிமுறைகளுக்கும் , தூதரக நடைமுறைகளுக்கும் முற்றிலும் முரணானதாகும்.
  • இந்த அச்சுறுத்தல்கள், குறிப்பாக, வெனிசியூலா மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத இராணுவ ஊடுருவல்கள் மற்றும் அந்த நாட்டின் ஜனாதிபதி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட சம்பவங்களின் பின்னணியில் முன்வைக்கப்பட்டுள்ளன.
எழுத்து அளவு:

முடியாது என அமெரிக்க ஜனாதிபதி, வெனிசியூலாவை ஆக்கிரமித்து, அதன் ஜனாதிபதியை சிறை பிடித்துள்ளதை வன்மையாகக் கண்டித்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் அவர் செவ்வாய்க்கிழமை (06) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

சர்வதேச சட்டத்தில் நாடொன்றை அபகரிப்பதற்கும் (Irredentism), பலவந்த ஆட்சி மாற்றத்திற்கும் (Regime
Change) அறவே இடமில்லை

இலத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் உலகின் ஏனைய பகுதிகளில் உள்ள பல நாடுகள், தங்களது இறையாண்மை மற்றும் நிலப்பரப்பு ஒருமைப்பாட்டை மீறக்கூடிய வகையில், இராணுவ தாக்குதல்கள் மற்றும் வேறு கட்டாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அச்சுறுத்தப்படுவதைக் குறித்து ஆழ்ந்த கவலையுடன் உற்று நோக்கப்படுகிறது.

இந்த அச்சுறுத்தல்கள், குறிப்பாக, வெனிசியூலா மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத இராணுவ ஊடுருவல்கள் மற்றும் அந்த நாட்டின் ஜனாதிபதி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட சம்பவங்களின் பின்னணியில் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தற்போதைய டிரம்ப் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டவையாகும்.

எவ்வளவு பெரியதோ அல்லது சக்திவாய்ந்ததோ என்றாலும், எந்த நாடும் சர்வதேச சட்டத்தையும் ஐக்கிய நாடுகள் சபை சாசனத்தையும் வெளிப்படையாக மீறுவதற்கு எவ்வித உரிமையுமில்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய உலகை ஒழுங்கு, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு சில தொடர்ச்சியான, இன்னும் தீர்க்கப்படாத சவால்கள் இருந்த போதிலும் கூட, மொத்தத்தில் இதில் உலகின் நிலைப்பாடு உறுதிப்படுத்தப்பட்டதாகும்.

ஆனால் இன்று சுயநல புவியியல், அரசியல் இலக்குகளை அடைவதற்காக கொடூரமாகவும் தீவிரமாகவும் முன்னெடுக்கும் நடவடிக்கைகள், அந்த ஒழுங்கை மேலும் நிலைகுலையச் செய்கின்றன. இன்றைய பூகோள அரசியலில் தற்காலிகமாக மேலோங்கியுள்ள வளங்களை சுரண்டுவதற்கான பேராசை, சர்வதேச சட்ட நெறிமுறைகளுக்கும் , தூதரக நடைமுறைகளுக்கும் முற்றிலும் முரணானதாகும்.

அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கை சாகசப்போக்கு, ஆட்சி மாற்றத் திட்டங்கள், அபகரிப்பு ஆசைகள் மற்றும் போர்களின் மூலம் மேற்கொள்ளப்படும் அட்டூழியங்களை மறைத்திருந்த அதன் முகமூடி கிழிந்துவிட்டது என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.

இப்போது அது வெளிப்படையாகவும் வெட்கமின்றியும் பிற நாடுகளின் வளங்களின் மீது உரிமையையும், ஆதிக்கத்தையும் கோருகிறது. ஆனால் சர்வதேச சட்டத்தின் படி, இயற்கை வளங்களின் மீதான முழு இறையாண்மையும் அவை வழங்கப்பட்டுள்ள அந்தந்த நாடுகளுக்கே சொந்தமானதாகும்.


இவ்வாறான முன்னேற்றங்கள், தடையின்றி தொடர அனுமதிக்கப்படுமானால் மனிதகுலம் முழுவதற்கும் இழிவை ஏற்படுத்தும். மேலும், ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்டதற்கான அடிப்படை நோக்கமான மற்றொரு உலகப் போரைத் தவிர்ப்பதைப் பாதிக்கும் வகையில், உலகை ஆபத்தான நிலைக்கு இட்டுச் செல்லும் இந்த மிகக் கொடூரமான செயல்கள் மற்றும் சம்பவங்களை நாம் எந்தவிதமான தயக்கமுமின்றி மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

நாடுகளுக்கிடையிலான மோதல்கள் மற்றும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான ஒரேயொரு வழியாக பரஸ்பரம் கலந்து ரையாடலும், ஒத்துழைப்புமே இருக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மற்றும் பலவீனமான நாடுகளுக்கும் மக்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்படும் ஒடுக்குமுறை கொள்கைகள் மற்றும் அநீதிகளை நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

சர்வதேச சமூகமானது, சம்பந்தப்பட்ட நாடுகளுடன் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து, உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தும் ஒருதலைப்பட்சத் தூண்டுதல்களை கட்டுப்படுத்துவதற்காக செயல்பட வேண்டிய தருணம் இதுவாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...