Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

காதலனை அடித்துக் கொன்று, துண்டு துண்டாக வெட்டி மலசலக்கூடக் குழியில் வீசிய பெண்!

T

The Leader Desk

மே 6, 2026 • 4:45 AM

காதலனை அடித்துக் கொன்று, துண்டு துண்டாக வெட்டி மலசலக்கூடக் குழியில் வீசிய பெண்!  

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • செய்து, சடலத்தைத் துண்டு துண்டாக வெட்டி உரம் பையில் பொதி செய்து, வீட்டின் அருகிலிருந்த மலசலக்கூடக் குழியில் வீசியதாகக் கூறப்படும் பெண்ணொருவரை மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
  • இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 30 வயதுடைய கண்ணன் நிரோஜினி என்ற பெண்ணாவார்.
  • இக்கொலையில் உயிரிழந்தவர் 35 வயதுடைய அருள் ஜெயா ரொய்ஸ்வனே ரேவல் என்பவராவார்.
  • உயிரிழந்த நபர் தினமும் மது அருந்திவிட்டு வந்து தகராறில் ஈடுபடுவதாகவும், கடந்த 4 ஆம் திகதி மதுபோதையில் வந்து ஏற்பட்ட தகராறின் போது, அந்தப் பெண் தனது கள்ளக்காதலனைத் தடியால் தாக்கியுள்ளார்.
எழுத்து அளவு:

செய்து, சடலத்தைத் துண்டு துண்டாக வெட்டி உரம் பையில் பொதி செய்து, வீட்டின் அருகிலிருந்த மலசலக்கூடக் குழியில் வீசியதாகக் கூறப்படும் பெண்ணொருவரை மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 30 வயதுடைய கண்ணன் நிரோஜினி என்ற பெண்ணாவார். இக்கொலையில் உயிரிழந்தவர் 35 வயதுடைய அருள் ஜெயா ரொய்ஸ்வனே ரேவல் என்பவராவார்.

இக்கொலைச் சம்பவத்தின் பின்னர் குறித்த பெண் மன்னார் பொலிஸில் சரணடைந்துள்ளார். உயிரிழந்த நபரும் சந்தேக நபரான பெண்ணும் மன்னார், மூர்வீதி, அயன் தியேட்டர் பகுதியில் உள்ள வாடகை வீடொன்றில் வசித்து வந்துள்ளனர்.

உயிரிழந்த நபர் தினமும் மது அருந்திவிட்டு வந்து தகராறில் ஈடுபடுவதாகவும், கடந்த 4 ஆம் திகதி மதுபோதையில் வந்து ஏற்பட்ட தகராறின் போது, அந்தப் பெண் தனது கள்ளக்காதலனைத் தடியால் தாக்கியுள்ளார். இதில் அவர் நிலத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

அதன்பின்னர், செய்வதறியாது திகைத்த அந்தப் பெண், உயிரிழந்த நபரின் தலை, கைகள், கால்கள் என உடலைத் துண்டு துண்டாக வெட்டி, உரம் பையொன்றில் போட்டு வீட்டின் அருகிலுள்ள மலசலக்கூடக் குழியில் வீசியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவருக்கும் இடையில் கடந்த ஐந்து வருடங்களாகத் தொடர்பு இருந்துள்ளதோடு, அவர்களுக்கு ஐந்து வயதுடைய பிள்ளையொன்று இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

சந்தேக நபரான பெண்ணின் சகோதரி வழங்கிய தகவலின் அடிப்படையில், மன்னார் பொலிஸார் சந்தேக நபரான பெண்ணிடம் விசாரணை நடத்தி இக்குற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், மன்னார் நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் சடலத்தைத் தோண்டி எடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பின்னர் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிணவறைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

காதலனை அடித்துக் கொன்று, துண்டு துண்டாக வெட்டி மலசலக்கூடக் குழியில் வீசிய பெண்! | Tamil Leader | We Lead the Nation