Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

சித்திரைப் புத்தாண்டுக்கு QR எப்படி வரும்?; ஜனாதிபதி விளக்கம்!

T

The Leader Desk

ஏப்ரல் 6, 2026 • 6:16 AM

சித்திரைப் புத்தாண்டுக்கு QR எப்படி வரும்?; ஜனாதிபதி விளக்கம்!  

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஊக்கத்தை அதிகாரிகள் வழங்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
  • எனவே, இது குறித்து ஒரு சிறப்பு விழிப்புணர்வுத் திட்டம் அவசியம்.
  • இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், "தேசிய QR கொடுப்பனவு விநியோகத் திட்டம்" (National QR Payment Promotion Project) ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

ஊக்கத்தை அதிகாரிகள் வழங்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், "தேசிய QR கொடுப்பனவு விநியோகத் திட்டம்" (National QR Payment Promotion Project) ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

சமூகத்தில் நிலவும் சில சிக்கலான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டுமானால், ஒரு நாடாக நாம் டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களுக்குள் பிரவேசிக்க வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி, முறைசாரா பொருளாதாரத்தை முறைசார்ந்த பொருளாதாரமாக மாற்றுவதே தனது நோக்கம் என்றும் குறிப்பிட்டார்.

துறைகளை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் 15 பில்லியன் டொலர் பெறுமதியான டிஜிட்டல் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் இலக்கை அரசாங்கம் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் சிறந்த கலாசாரத்தைக் கொண்டுள்ள நமது சமூகத்தில் இப்புதிய முறைகளை எவ்வாறு பிரபல்யப்படுத்துவது என்ற சவால் அரசாங்கத்திடம் உள்ளதாகவும் கூறினார்.

"QR என்று சொன்னால் உங்கள் நினைவுக்கு வருவது என்ன? எரிபொருளைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு கருவி. QR இன் கீழ் உரம் வழங்கப் போவதாகக் கூறப்பட்டபோது, உரத்தையும் வெட்டப் போகிறார்கள் என்ற ஒரு கருத்து உருவானது... இறுதியில் QR என்பது 'கட்டுப்படுத்துதல்' என்ற எல்லைக்குள் சுருங்கிவிட்டது. இப்போது கொடுக்கல் வாங்கல்களுக்கும் இது வரும்போது, இதையும் கட்டுப்படுத்தப் போகிறார்களா என்று மக்கள் நினைக்கலாம். எனவே, இது குறித்து ஒரு சிறப்பு விழிப்புணர்வுத் திட்டம் அவசியம்.

ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை மூலம் நமது நாட்டில் QR குறியீடுகள் ஊடாக இடம்பெறும் அனைத்து கொடுக்கல் வாங்கல்களையும் மிக விரைவாகப் பிரபல்யப்படுத்த முடியும் என நாம் நம்புகிறோம். இது தொடர்பில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்குப் பாரிய பொறுப்பு உள்ளது. பல நிதி நிறுவனங்கள் இப்போது புத்தாண்டுக்கான விளம்பரங்களைத் தயாரித்து வருகின்றன. இதனை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி, புத்தாண்டில் மேற்கொள்ளப்படும் கொடுக்கல் வாங்கல்களை QR குறியீடுகள் ஊடாக மாற்ற முடிந்தால், அது ஒரு சிறந்த திருப்புமுனையாக அமையும் என நான் நினைக்கிறேன். அப்போது மக்கள் அதனை ஏற்றுக்கொள்வார்கள். எமது சமூகம் புதிய விடயங்களை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக உள்ளது. ஆனால், புதிய விடயம் கவர்ச்சிகரமானதாகவோ அல்லது இலகுவானதாகவோ இல்லாவிட்டால் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்..."

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...