இன்று (06) நள்ளிரவு முதல் 20 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிவாயு (Gas) விலையில் ஏற்பட்டுள்ள கணிசமான அதிகரிப்பு காரணமாகவே உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், தேங்காய் எண்ணெய் விலை குறைவடைந்துள்ளதன் காரணமாக, சிற்றுண்டிகளின் (Short eats) விலைகள் 10 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதாக அந்தச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.


