ஒரு பாலஸ்தீனியர் உயிரிழந்ததுடன் நால்வர் காயமடைந்துள்ளனர்.
ஹமாஸ் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து தனது இராணுவப் பிரிவினர் மீது தாக்குதல்களைத் திட்டமிட்டிருந்த ஆயுததாரி ஒருவரை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபரில் காசா போர்நிறுத்தம் ஆரம்பமானது முதல் இதுவரையில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் உயிரிழந்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 422 ஆகும். இதே காலப்பகுதியில் பாலஸ்தீனியப் போராளிகளால் மூன்று இஸ்ரேலிய இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.
போர்நிறுத்தத்தின் முதற்கட்டத்தின் கீழ், காசா முனையின் 53% அதிகாரம் இஸ்ரேலிய இராணுவத்தின் வசம் உள்ளது.
காசா போரில் இதுவரை 71,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.


