நடத்தப்பட்ட விசேட நாடாளுமன்ற அமர்வின் போது, வெனிசுலாவின் புதிய இடைக்கால ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodríguez) பதவியேற்றுள்ளார்.
56 வயதான ரோட்ரிக்ஸ், 2018 ஆம் ஆண்டு முதல் வெனிசுலாவின் துணை ஜனாதிபதியாக கடமையாற்றி வந்தார்.
தேசிய அரசியலமைப்பு சபையின் தலைவரும் தனது சகோதரருமான ஜார்ஜ் ரோட்ரிக்ஸ் முன்னிலையில் அவர் பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது. இந்தப் பதவியேற்பு நிகழ்வின் சட்டபூர்வ தன்மையை நிக்கோலஸ் மதுரோவின் மகனான நிக்கோலஸ் மதுரோ குரேரா மேற்பார்வை செய்தார்.
இந்த நிகழ்வின் போது, கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட 283 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
கடந்த சனிக்கிழமை அமெரிக்க விசேட படையினரால் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் (Cilia Flores) ஆகியோர் கைது செய்யப்பட்டமையை அவர் "கடத்தல்" என விவரித்தார். நியூயோர்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிக்கோலஸ் மதுரோ, தன் மீது சுமத்தப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகளுக்கும் தான் "குற்றமற்றவர்" எனத் தெரிவித்துள்ளார்.
"நான் இன்னும் எனது நாட்டின் ஜனாதிபதி, நான் ஒரு கௌரவமான நபர்" என்று அவர் நீதிபதியிடம் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், முறையான ஆட்சிமுறை ஒன்று நிறுவப்படும் வரை வெனிசுலா அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.


