இன்று (06) நடைபெற்ற மாதாந்த சபை அமர்வின் போதே அவர் இதனை அறிவித்தார்.
இன்று காலை தலைவரின் தலைமையில் ஆரம்பமான நகர சபையின் மாதாந்த அமர்வில், அவர் வழமை போன்று சபையை வழிநடத்தினார். ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு பதிலளித்தவாறு அவர் சபையை முன்னெடுத்துச் சென்றார்.
அமர்வின் நிகழ்ச்சி நிரலின் இறுதி அங்கமாக தலைவரின் உரை இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய அவர், தனிப்பட்ட காரணங்களுக்காக தான் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்தார்.
இதன்போது, சபையிலுள்ள உறுப்பினர்கள் அவரை பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என்று கோரிக்கை விடுத்த போதிலும், அவர் தனது முடிவில் உறுதியாக இருந்து சபையை விட்டு வெளியேறினார். பின்னர் தனது உத்தியோகபூர்வ அறைக்குச் சென்று, தனது பையை எடுத்துக்கொண்டு சபையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.


