Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களை மத நம்பிக்கையின்படி 06 மாதகாலமாகியும் அடக்கம் செய்ய முடியவில்லை!

T

The Leader Desk

நவம்பர் 7, 2020 • 3:37 PM

கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களை மத நம்பிக்கையின்படி 06 மாதகாலமாகியும் அடக்கம் செய்ய முடியவில்லை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நவம்பர் 3ம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இது சம்பந்தமாக பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.
  • மேற்படி விடயம் சம்பந்தமாக குழுவொன்றை அமைத்து தீர்மானத்தை பெற்றுத் தருமாறு கோரப்பட்டு 6 மாதங்கள் கடந்துள்ள போதிலும் இது வரை நீதி கிடைக்கவில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.
  • ‘இதுவரை 9 முஸ்லிம்கள் மரணித்துள்தோடு அவர்களுக்கு அந்த உரிமை மறுக்கப்பட்டுள்ள நிலையில் நீதி அமைச்சரான நீங்களோ அல்லது நானோ இறந்துவிட்டாலும் அந்த உரிமை மறுக்கப்பட்டுவிடும்’.
  • இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படி ஒருவர் இறந்த பின்னர் அவரை அடக்கம் செய்வது இறந்தவருக்கு செய்யும் உயர்ந்த மரியாதையாகும்.
எழுத்து அளவு:

நவம்பர் 3ம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இது சம்பந்தமாக பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தார். மேற்படி விடயம் சம்பந்தமாக குழுவொன்றை அமைத்து தீர்மானத்தை பெற்றுத் தருமாறு கோரப்பட்டு 6 மாதங்கள் கடந்துள்ள போதிலும் இது வரை நீதி கிடைக்கவில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.

‘இதுவரை 9 முஸ்லிம்கள் மரணித்துள்தோடு அவர்களுக்கு அந்த உரிமை மறுக்கப்பட்டுள்ள நிலையில் நீதி அமைச்சரான நீங்களோ அல்லது நானோ இறந்துவிட்டாலும் அந்த உரிமை மறுக்கப்பட்டுவிடும்’. எனவே, இந்த விடயத்தில் நீதி அமைச்சர் கவனம் செலுத்த வேண்டுமெனவும் பா.உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறினார்.

இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படி ஒருவர் இறந்த பின்னர் அவரை அடக்கம் செய்வது இறந்தவருக்கு செய்யும் உயர்ந்த மரியாதையாகும். இறந்தவர்களை தகனம் செய்வது இஸ்லாமியர்களின் உரிமையை பறிப்பதாகுமெனக் கருதப்படுகிறது. ஆகவே கொரோனா நோயினால் இறக்கும் இஸ்லாமியர்களை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு கடந்த மார்ச் மாதம் கொரோனா அலை வீசத்தொடங்கிய சந்தர்ப்பத்தில் இஸ்லாமிய சமூகம் கோரிய போதிலும், அந்த கோரிக்கை தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு முரணானதெனக் கூறி அரசாங்கம் அந்தக் கோரிக்கையை நிராகரித்தது.

என்றாலும், முஸ்லிம் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதனால் கொரோனா பரம்பலுக்கு வாய்ப்பில்லை என்பதால் தனிமைப்படுத்தல் முறைக்கேற்ப அவ்வாறு இறுதிக் கிரியைகளை செய்வது தவறாகாதென உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொரோனாவினால் இறந்த 13 முஸ்லிம்களின் உடல்கள் இதுவரை தகனம் செய்யப்பட்டுள்ளன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களை மத நம்பிக்கையின்படி 06 மாதகாலமாகியும் அடக்கம் செய்ய முடியவில்லை! | Tamil Leader | We Lead the Nation