Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

தரமற்ற முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களுக்கு எதிராகச் சட்டங்கள் கடுமையாக்கப்படும்!

T

The Leader Desk

ஜூன் 5, 2026 • 5:01 AM

தரமற்ற முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களுக்கு எதிராகச் சட்டங்கள் கடுமையாக்கப்படும்!  

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.
  • அதேவேளை, பதிவு செய்யப்படாத அல்லது சட்டவிரோதமான இடங்களில் முதியவர்களைத் தங்க வைப்பதைத் தவிர்க்குமாறு அவர்களின் பாரமரிப்பாளர்களிடம் (Guardians) அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
  • இதேவேளை, நாடளாவிய ரீதியில் தற்போது சுமார் 455 பதிவு செய்யப்பட்ட முதியோர் இல்லங்கள் இயங்கி வருவதுடன், அரசாங்கத்தினால் நேரடியாக நடத்தப்படும் முதியோர் பராமரிப்பு நிலையங்களின் எண்ணிக்கை 03 மாத்திரமே என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.

முதியோர் பராமரிப்பு நிலையங்களை ஒழுங்குபடுத்துவதற்கு அவசியமான விதிமுறைகள் தற்போது தயாரிக்கப்பட்டு முடிவடைந்துள்ளதாகவும், அதற்கான சட்டப்பூர்வ ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சபைகளுடன் கலந்துரையாடி ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்ததன் பின்னர், இந்த புதிய விதிமுறைகள் அரசாங்க வர்த்தமானியில் (Gazette) வெளியிடப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் கூறினார்.

பதிவு செய்யப்படாத இடங்களில் முதியவர்களைத் தங்க வைக்க வேண்டாம் எனப் பாரமரிப்பாளர்களிடம் கோரிக்கை

இதற்கமைய, நாடளாவிய ரீதியில் நடத்தப்படும் அனைத்து முதியோர் பராமரிப்பு நிலையங்களும் இந்த புதிய விதிமுறைகளுக்கு உட்பட்டே செயற்பட வேண்டும்.

அதேவேளை, பதிவு செய்யப்படாத அல்லது சட்டவிரோதமான இடங்களில் முதியவர்களைத் தங்க வைப்பதைத் தவிர்க்குமாறு அவர்களின் பாரமரிப்பாளர்களிடம் (Guardians) அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது இயங்கி வரும் முதியோர் இல்லங்களில் சில நிறுவனங்கள் மிகச் சிறந்த மட்டத்தில் பராமரிக்கப்பட்டு வந்த போதிலும், சில இடங்களில் போதிய வசதிகள், பாதுகாப்பு மற்றும் தேவையான ஊழியர் பற்றாக்குறை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான தரமற்ற நிறுவனங்களை எதிர்காலத்தில் நடத்துவதற்கு இடமளிக்கப் போவதில்லை என்றும், அது தொடர்பில் சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் தற்போது சுமார் 455 பதிவு செய்யப்பட்ட முதியோர் இல்லங்கள் இயங்கி வருவதுடன், அரசாங்கத்தினால் நேரடியாக நடத்தப்படும் முதியோர் பராமரிப்பு நிலையங்களின் எண்ணிக்கை 03 மாத்திரமே என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...