செய்வதற்காக மாகாண மட்டத்தில் ஒன்பது அலகுகளை நிறுவும் பணிகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் பிரீத்தி இனோகா ரணசிங்க தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இந்த பணிகளை முன்னெடுப்பதற்குத் தேவையான ஊழியர் பற்றாக்குறை நிலவியதாகவும், தற்போது அந்த ஊழியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு முடிந்துள்ளதாகவும் தலைவி தெரிவித்தார்.
தற்போது சிறுவர்களின் சாட்சியங்கள் கொழும்பு பிரதான அலுவலகம் மற்றும் ராகம வைத்தியசாலையில் அமைந்துள்ள இரண்டு அலகுகளில் மாத்திரமே பதிவு செய்யப்படுகின்றன.
அனுராதபுரம் மற்றும் காலி வைத்தியசாலை அலகுகளில் இந்தப் பதிவுகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான உபகரணங்களைப் பெற்றுக்கொள்ள அதிகாரசபைக்கு முடிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதன்படி, எதிர்காலத்தில் அந்த இரு மாகாணங்களிலும் துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுவர்களின் சாட்சியங்களை வீடியோவில் பதிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி மேலும் தெரிவித்தார்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை இந்தப் பணிகளை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டு தற்போது ஐந்து வருடங்கள் கடந்துள்ள போதிலும், இதுவரை இரண்டு அலகுகள் மாத்திரமே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மாகாண மட்டத்தில் இந்த அலகுகளை நிறுவி, சாட்சியங்களைப் பதிவு செய்து விசாரணைகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய கணக்காய்வு அலுவலகம் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் அண்மையில் பரிந்துரை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


