Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

இன்று ஈஸ்டர் ஞாயிறு!

T

The Leader Desk

ஏப்ரல் 5, 2026 • 5:03 AM

இன்று ஈஸ்டர் ஞாயிறு!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தினத்தை (05) உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்று மிகுந்த பக்தியுடன் கொண்டாடுகின்றனர்.
  • இயேசுவின் பாடுகள், மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை நினைவு கூர்ந்து கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்த 40 நாட்கள் தவக்காலம் இந்த ஈஸ்டர் ஞாயிறு தினத்துடன் நிறைவடைகிறது.
  • இது, நம்பிக்கை, புதிய மாற்றம் மற்றும் கருணையின் நித்திய சக்தியை நினைவூட்டுகின்றது.
  • அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதி இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு 2026-04-05.
எழுத்து அளவு:

தினத்தை (05) உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்று மிகுந்த பக்தியுடன் கொண்டாடுகின்றனர்.

உலக மக்களின் பாவங்களைப் போக்குவதற்காக சிலுவையில் உயிர்த்தியாகம் செய்த இயேசு கிறிஸ்து, மூன்று நாட்களின் பின்னர் உயிர்த்தெழுந்ததையே 'ஈஸ்டர் பெருவிழாவாக' கிறிஸ்தவர்கள் கொண்டாடுகிறார்கள்.

இயேசுவின் பாடுகள், மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை நினைவு கூர்ந்து கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்த 40 நாட்கள் தவக்காலம் இந்த ஈஸ்டர் ஞாயிறு தினத்துடன் நிறைவடைகிறது.

இஸ்ரேலின் ஜெருசலேம் தலைநகரில் உள்ள கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டு மரணமடைந்த இயேசு கிறிஸ்து, இன்றைய தினத்தில் உயிர்த்தெழுந்து தனது சீடர்களுக்குக் காட்சியளித்ததாக பைபிள் குறிப்பிடுகிறது.

ஈஸ்டர் பெருவிழாவை முன்னிட்டு "அல்லேலூயா" சனிக்கிழமை நள்ளிரவு திருப்பலிகள் நேற்று இரவு அனைத்து தேவாலயங்களிலும் நடைபெற்றன.

கொழும்பு மறைமாவட்ட ஆயர் அதிமேதகு மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கலந்து கொண்ட விசேட திருப்பலி கொட்டாஞ்சேனை புனித லூசியா கதீட்ரலில் நடைபெற்றது.

ஈஸ்டர் ஞாயிறு தின விசேட திருப்பலிகளை முன்னிட்டு தேவாலயங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த தேசிய கத்தோலிக்க வெகுஜனத் தொடர்புப் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிசாந்த பெர்னாண்டோ, முப்படைகளின் அதிகாரிகளும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதனால் மக்கள் தேவையற்ற அச்சமின்றித் தமது மத வழிபாடுகளில் ஈடுபட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

666018234_1384549390371344_6128691784171836258_n.jpg

ஜனாதிபதியின் உயிர்த்த ஞாயிறு தினச் செய்தி

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவு கூர்ந்து, இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் மிகுந்த பக்தியுடன் உயிர்த்த ஞாயிறு தினத்தைக் கொண்டாடுகின்றனர். இது, நம்பிக்கை, புதிய மாற்றம் மற்றும் கருணையின் நித்திய சக்தியை நினைவூட்டுகின்றது.

உயிர்த்த ஞாயிறு என்பது ஒரு மத நிகழ்வு என்பதைத் தாண்டி, அது மனிதாபிமானம், அன்பு மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றை மீண்டும் நினைவுபடுத்தும் கிறிஸ்தவர்களின் கலாசார பண்டிகையாகும்.

மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து, உறுதியான சங்கற்பமும் அர்ப்பணிப்பும் இருந்தால் இருளை வென்று ஒளியையும், பயத்தை வென்று நம்பிக்கையையும், வேதனையை வென்று நித்திய மகிழ்ச்சியையும் அடைய முடியும் என்பதைத் தமது வாழ்வின் மூலம் உலகிற்கு எடுத்துக் காட்டினார்.

தமக்காகத் தன்னுயிரைத் தியாகம் செய்த இயேசு கிறிஸ்துவுக்காக ஒன்றிணைந்து நின்ற மக்கள், உலகிற்கு ஒற்றுமையின் நற்செய்தியை வழங்கினர். தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகெங்கிலும் உள்ள மக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதை நாம் மறந்துவிட முடியாது.

பகைமையை முதன்மையாகக் கொண்டு நடத்தப்படும் போருக்குப் பதிலாக, உலக மக்கள் அனைவரும் அமைதியையும் சகவாழ்வையுமே விரும்புகின்றனர். இந்த உன்னதமான உயிர்த்த ஞாயிறு தினத்தில் அமைதியை நோக்கிய பாதை மலர வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன்.

இயேசு கிறிஸ்துவின் போதனைகளில் குறிப்பிட்டுள்ளவாறு, நமது இதயங்களை அன்பு, பொறுமை மற்றும் மன்னிப்பு எனும் உன்னத குணங்களால் நிரப்பி, ஒரே தாயின் பிள்ளைகளாகப் பேதங்களை மறந்து, இதயத்தால் ஒன்றிணைந்த ஒரே இலங்கை நாட்டின் குடும்பமாக முன்னோக்கிச் செல்வோம்! அதற்காகச் சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம்.

துயருற்ற மக்களின் இரட்சிப்பிற்காகத் தனது உயிரையே அர்ப்பணித்த இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்டதன் பின்னர் மரணத்தின் இருளைத் தோற்கடித்து உயிர்த்தெழுந்ததை நினைவுபடுத்தும் இந்த உன்னதமான உயிர்த்த ஞாயிறு தினத்தைக் கொண்டாடும் அனைத்து இலங்கை வாழ் மற்றும் உலகவாழ் கிறிஸ்தவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் கருணையும் அமைதியும் நிறைந்த இனிய உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துகள்!

அநுர குமார திசாநாயக்க
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு
2026-04-05

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இன்று ஈஸ்டர் ஞாயிறு! | Tamil Leader | We Lead the Nation