ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் காணொளி ஊடாக விசேட கலந்துரையாடலொன்றை முன்னெடுத்தார்.
இந்த ஆண்டு சீனாவின் ஐந்தாண்டுத் திட்டத்தின் ஆரம்ப ஆண்டு எனவும், மிகவும் சுறுசுறுப்பான திறந்த தன்மையூடாக ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகளுடன் அபிவிருத்தியின் புதிய வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்ள சீனா விருப்பத்துடன் இருப்பதாகவும் இதன்போது ஷீ ஜின்பிங் குறிப்பிட்டார்.
2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து சர்வதேச நிலைமை மென்மேலும் கொந்தளிப்பானதாக மாறியுள்ள நிலையில், பொறுப்புவாய்ந்த பிரதான நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர்கள் என்ற ரீதியில், சீனாவும் ரஷ்யாவும் சர்வதேச நீதியையும் நியாயத்தையும் ஊக்குவித்து, உலகளாவிய மூலோபாய ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கு இணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ஷீ ஜின்பிங் சுட்டிக்காட்டினார்.
புதிய ஆண்டை நோக்கிய பயணத்தில் ரஷ்ய - சீன உறவு குறித்து தனது நாடு முழுமையான நம்பிக்கையுடன் இருப்பதாக இதன்போது ரஷ்ய ஜனாதிபதி தெரிவித்தார். சிக்கலான மற்றும் ஸ்திரமற்ற சர்வதேச நிலைமைகளுக்கு மத்தியில், சர்வதேச விவகாரங்களில் சாதகமான சக்தியைச் சேர்ப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை, ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மற்றும் பிரிக்ஸ் (BRICS) உள்ளிட்ட பல்தரப்பு தளங்களில் சீனாவுடனான மூலோபாய ஒத்துழைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்த ரஷ்யா தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இரு நாட்டுத் தலைவர்களும் சர்வதேச மற்றும் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த சமகால விவகாரங்கள் குறித்து இதன்போது கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.


