நடத்தப்படுவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, இன்று (05) அவர் இந்தத் தகவல்களை வெளிப்படுத்தினார்.
தற்போது இக்கிளினிக்குகளில் 4,771 எச்.ஐ.வி (HIV/AIDS) நோயாளர்களும், 1,469 சிபிலிஸ் (Syphilis) நோயாளர்களும், 2,891 ஹெர்பெஸ் (Herpes) நோயாளர்களும் சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, எயிட்ஸ் நோயைத் தடுப்பதற்காக வழங்கப்படும் மருந்து மாத்திரைகள் தற்போது 36,421 கையிருப்பில் உள்ளதாகவும், இது அடுத்த நான்கு மாதங்களுக்குப் போதுமானது என்றும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


