Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

10க்கும் குறைவான ஆசிரியர்களைக் கொண்ட 3,065 அரச பாடசாலைகள்!

T

The Leader Desk

பிப்ரவரி 5, 2026 • 4:22 AM

10க்கும் குறைவான ஆசிரியர்களைக் கொண்ட 3,065 அரச பாடசாலைகள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் (Department of Census and Statistics) தெரிவித்துள்ளது.
  • ஆம் ஆண்டுக்கான தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின்படி, நாடு முழுவதும் மொத்தம் 10,047 பாடசாலைகள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • அந்தப் பாடசாலைகளில் 3,065 பாடசாலைகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கை 10 க்கும் குறைவாகவே உள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
  • மேலும், நாடு முழுவதும் உள்ள 1,645 அரச பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை 50 க்கும் குறைவாக உள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் (Department of Census and Statistics) தெரிவித்துள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின்படி, நாடு முழுவதும் மொத்தம் 10,047 பாடசாலைகள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தப் பாடசாலைகளில் 3,065 பாடசாலைகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கை 10 க்கும் குறைவாகவே உள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறு குறைந்த எண்ணிக்கையிலான ஆசிரியர்களைக் கொண்ட பாடசாலைகளில் ஒரு தேசியப் பாடசாலையும் (National School) உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், நாடு முழுவதும் உள்ள 1,645 அரச பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை 50 க்கும் குறைவாக உள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

50 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட இந்தப் பாடசாலைகளில் ஒரு தேசியப் பாடசாலையும் ஏனைய 1,644 பாடசாலைகள் மாகாணப் பாடசாலைகளும் (Province Schools) ஆகும்.

அத்துடன், 51 முதல் 100 வரையான மாணவர்களைக் கொண்ட 1,648 அரச பாடசாலைகள் உள்ளதோடு, இவை அனைத்தும் மாகாணப் பாடசாலைகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு அரச பாடசாலைகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது.

2025ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு இரண்டு இலட்சத்து 66,281 (266,281) மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...