நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று (04) காலை சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வின் பின்னர், தனது பேஸ்புக் சமூக வலைத்தள பக்கத்தில் நேரடி காணொளி (Live Video) ஒன்றைப் பதிவிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்:
"கௌரவ ஜனாதிபதி அவர்கள் தனது உரையில், பொதுவாகச் சொல்லாத ஒரு விடயத்தை இன்று கூறினார். அதாவது, கடந்த 75 ஆண்டுகளில் நல்ல விடயங்களும் நடந்துள்ளன, தீய விடயங்களும் நடந்துள்ளன. ஆனால் நல்ல விடயங்கள் இருந்தன. '75 வருடகால சாபம்' என்ற கூற்றை இன்று ஜனாதிபதி அவர்கள் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது நிராகரித்துள்ளதாகவே நான் கருதுகிறேன். இதையேதான் நாமும் தொடர்ச்சியாக கூறி வந்தோம். நல்லவையும் நடந்தன, நல்லவை அல்லாதவையும் நடந்தன. ஆனால் எல்லாமே மோசமானவை அல்ல."
78 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் ஈட்டிக்கொண்ட பலமான மற்றும் நீதியான விடயங்களை மேலும் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் எனத் தெரிவித்த ஹர்ஷ டி சில்வா, சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து பலமான நாடாக முன்னோக்கிச் செல்வதே தனது பிரார்த்தனை என்றும் குறிப்பிட்டார்.
அதேவேளை, சுதந்திரம் கிடைத்து 78 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் நாடு இன்னும் பொருளாதார ரீதியில் சுதந்திரமடையவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், மக்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டுமாயின் நாடு பொருளாதார சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வது அவசியமானது எனக் கூறினார். மக்கள் தமது உழைப்பையும் செல்வத்தையும் தமக்கு விருப்பமான முறையில் பயன்படுத்துவதற்கான வாய்ப்பே உண்மையான சுதந்திரம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


