Tamil Leader News
முக்கியம்
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாசவின் மகன் ரகித்தவின் சொத்துகளை முடக்கம்!●527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●
செய்திகள்

தையிட்டி பிரச்சினைக்கு மிக விரைவில் தீர்வு; காணி உரிமையாளர்கள் பொறுமை காக்க வேண்டும்!

T

The Leader Desk

ஜனவரி 5, 2026 • 7:00 AM

தையிட்டி பிரச்சினைக்கு மிக விரைவில் தீர்வு; காணி உரிமையாளர்கள் பொறுமை காக்க வேண்டும்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எனவே, காணி உரிமையாளர்கள், அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் செயற்படாது பொறுமை காக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம்' என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
  • 'எமது அரசு இந்த விடயத்தில் ஆழ்ந்த கரிசனை செலுத்தியுள்ளது.
  • இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 'தையிட்டியை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் நோக்கம் எமக்குக் கிடையாது.
எழுத்து அளவு:

என்று உறுதியளிக்கின்றோம். எனவே, காணி உரிமையாளர்கள், அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் செயற்படாது பொறுமை காக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம்' என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

'தையிட்டியை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் நோக்கம் எமக்குக் கிடையாது. தமிழ் அரசியல்வாதிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் இந்த விவகாரத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதை நிறுத்த வேண்டும்.

'இது தையிட்டி காணி உரிமையாளர்களுக்கும் திஸ்ஸ விகாரையின் விகாராதிபதிக்கும் இடையிலான பிரச்சினை. இதில் வேறு தரப்பினர் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு மேற்படி இரு தரப்புகளும் பேச்சு நடத்தித் தீர்வு காண வேண்டும். இது இலகுவான காரியம்.

'எமது அரசு இந்த விடயத்தில் ஆழ்ந்த கரிசனை செலுத்தியுள்ளது. இரு தரப்புகளும் இணக்கத்துக்கு வருவதற்கான வழிவகைகளை அரசின் விசாரணைக் குழு செய்யும். எனவே, தையிட்டி திஸ்ஸ விகாரை மற்றும் அங்குள்ள மக்களின் காணிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு மிக விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளிக்கின்றோம். இந்த விவகாரத்தில் வேறு தரப்பினர் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கின்றோம்.

'அதேவேளை, தையிட்டி காணி உரிமையாளர்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம். அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் காணி உரிமையாளர்கள் செயற்படக்கூடாது' என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...