Tamil Leader News
முக்கியம்
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாசவின் மகன் ரகித்தவின் சொத்துகளை முடக்கம்!●527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●
செய்திகள்

பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமான போதிலும் தரம் 6 மாணவர்களுக்கு சிக்கல்!

T

The Leader Desk

ஜனவரி 5, 2026 • 6:41 AM

பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமான போதிலும் தரம் 6 மாணவர்களுக்கு சிக்கல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாடசாலைகளுக்கு வருகை தந்துள்ளனர்.
  • அதேபோல், சர்ச்சைக்குள்ளாகியுள்ள தரம் 6 கல்விச் சீர்திருத்தங்களின் 'மொடியுல்கள்' (Modules) தொடர்பாகப் பல பிரச்சினைகள் காணப்படுவதாகவும், அவற்றை எழுதுவதற்காகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் தகுதியானவர்களா என்பதே பிரதான கேள்வி எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
  • சர்ச்சைக்குரிய 8 இலட்சம் பக்கங்களை அகற்ற வேண்டியுள்ளது.
எழுத்து அளவு:

பாடசாலைகளுக்கு வருகை தந்துள்ளனர். எனினும், அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்தினால் முறையான எவ்வித திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படவில்லை என அதிபர் தர உத்தியோகத்தர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நிமல் முதுன்கொடுவ தெரிவித்துள்ளார்.

தரம் 6 க்கான கல்வி நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக 21ஆம் திகதியே ஆரம்பிக்கப்படும் என அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதுவரை மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கு பாடத்திட்டங்கள் இல்லாததால் ஆசிரியர்களும் அதிபர்களும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் தினத்தில் அரசாங்கத்தினால் பாடசாலைகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஆவணங்கள் சில உள்ளதாகவும், அவற்றில் மாணவர் பெயர்ப்பட்டியல் (Register) முதன்மையானது என்றும் குறிப்பிட்ட அவர், வரலாற்றில் முதல் முறையாக பாடசாலை ஆரம்பமான தினத்திலும் 2026ஆம் ஆண்டிற்கான பெயர்ப்பட்டியல்கள் கிடைக்கவில்லை என மேலும் தெரிவித்தார்.

அதேபோல், சர்ச்சைக்குள்ளாகியுள்ள தரம் 6 கல்விச் சீர்திருத்தங்களின் 'மொடியுல்கள்' (Modules) தொடர்பாகப் பல பிரச்சினைகள் காணப்படுவதாகவும், அவற்றை எழுதுவதற்காகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் தகுதியானவர்களா என்பதே பிரதான கேள்வி எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதிபர் தர உத்தியோகத்தர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நிமல் முதுன்கொடுவ மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:

"சர்ச்சைக்குரிய இந்த மொடியுல்கள் தொடர்பாக அரசாங்கம் எடுத்துள்ள தீர்வு, அந்தப் பக்கங்களை அகற்றுவதாகும். தற்போது சமூக வலைத்தளங்களில் சாதாரண குடிமக்கள் இந்த மொடியுல்களை அவதானித்து, அவற்றில் உள்ள பெருமளவிலான குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி வருகின்றனர். சில மொடியுல்களில் நூற்றுக்கணக்கான இலக்கணப் பிழைகள் காணப்படுவதை நாம் கண்டோம். அப்படியாயின், மேலும் பிரச்சினைகள் எழும்போதும் அந்தப் பக்கங்களையும் அகற்றுவதுதான் அரசாங்கத்தின் தீர்வா என நாம் கேட்கிறோம். சர்ச்சைக்குரிய 8 இலட்சம் பக்கங்களை அகற்ற வேண்டியுள்ளது. அதை யார் செய்வது? எப்படிச் செய்வது? என்று எமக்குத் தெரியவில்லை.

மறுபுறம், பக்கங்களை அகற்றுவதால் எந்தப் பயனும் இல்லை. ஏனெனில் இதன் PDF கோப்பு ஏற்கனவே வெளியாகியுள்ளது. எனவே அறிய வேண்டிய அனைவரும் இவற்றை அறிந்துவிட்டனர். பக்கங்களை அகற்றுவதில் எந்த அர்த்தமும் இல்லை. மொடியுல்களில் மேலும் பிரச்சினைகள் இருந்தால், அங்கும் பக்கங்களை அகற்றுவதுதான் அரசாங்கத்தின் தீர்வா என்பதை அறிய விரும்புகிறோம்."

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமான போதிலும் தரம் 6 மாணவர்களுக்கு சிக்கல்! | Tamil Leader | We Lead the Nation