ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.
கடந்த அரசாங்க காலத்தில் விவசாய அமைச்சின் செயல்பாடுகளுக்காக ராஜகிரிய பகுதியில் வாடகை அடிப்படையில் கட்டிடமொன்றைப் பெற்றுக்கொண்டமை தொடர்பில் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.
அதன்படி, குறித்த சம்பவம் தொடர்பில் அப்போதைய அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சராகப் பணியாற்றிய முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்தே, அவர் இன்று காலை இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.


