என்று அந்நாட்டின் இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரே இரவில் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியைக் கைது செய்ததையடுத்து, தான் ஒரு கியூபா அரசாங்க அதிகாரியாக இருந்தால் இது குறித்து சற்றே வியப்படைவேன் என ரூபியோ கூறுகிறார்.
"நான் ஹவானாவில் வசிக்கும் அரசாங்கத்துடன் தொடர்புடைய ஒரு நபராக இருந்தால், குறைந்தபட்சம் ஓரளவாவது கவலைப்படுவேன்" என்று வெனிசுலா மற்றும் கியூபா குறித்து நீண்டகாலமாக அவதானம் செலுத்தி வரும் ரூபியோ மேலும் தெரிவித்தார்.
அமெரிக்காவிற்கு எதிராகச் செயற்பட்ட கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவைப் பதவியிலிருந்து நீக்க முயற்சித்தது உட்பட, லத்தீன் அமெரிக்காவில் பல இராணுவத் தலையீடுகளை மேற்கொண்ட நீண்ட வரலாற்றை அமெரிக்கா கொண்டுள்ளது.


