Tamil Leader News
முக்கியம்
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாசவின் மகன் ரகித்தவின் சொத்துகளை முடக்கம்!●527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●
செய்திகள்

மதுரோவும் அவரது மனைவியும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர்!

T

The Leader Desk

ஜனவரி 5, 2026 • 5:58 AM

மதுரோவும் அவரது மனைவியும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கூட்டாட்சி (பெடரல்) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
  • கடந்த 3ஆம் திகதி காரகாஸ் தலைநகரில் அமெரிக்கப் படைகள் மேற்கொண்ட விசேட இராணுவ நடவடிக்கையின் போது இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
  • ஹெல்லர்ஸ்டைன் இந்த விசாரணையை நடத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக 2020 ஆம் ஆண்டிலும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன, ஆனால் அவர் அக்காலப்பகுதியில் அந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்திருந்தார்.
எழுத்து அளவு:

கூட்டாட்சி (பெடரல்) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 3ஆம் திகதி காரகாஸ் தலைநகரில் அமெரிக்கப் படைகள் மேற்கொண்ட விசேட இராணுவ நடவடிக்கையின் போது இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாத சதித்திட்டம், ஆயுதங்கள் மற்றும் அழிவுகரமான உபகரணங்களை வைத்திருத்தல் மற்றும் அந்த ஆயுதங்கள் மூலம் அமெரிக்காவிற்கு எதிராக சதி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் மதுரோ மற்றும் அவரது மனைவி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இது தொடர்பான வழக்கு மன்ஹாட்டனில் உள்ள கூட்டாட்சி நீதிமன்றத்தில் இன்று மதிய வேளையில் ஆரம்பமாகவுள்ளது.

அமெரிக்க மாவட்ட நீதிபதி ஆல்வின் கே. ஹெல்லர்ஸ்டைன் இந்த விசாரணையை நடத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மதுரோவும் ஏனைய வெனிசுலா தலைவர்களும் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவிற்கு கொக்கைன் இறக்குமதி செய்வதற்கு வசதியாக தங்களது அரசாங்க பதவிகளைப் பயன்படுத்தியதாக அந்நாட்டின் நீதித்துறை குற்றம் சுமத்தியுள்ளது.

நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக 2020 ஆம் ஆண்டிலும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன, ஆனால் அவர் அக்காலப்பகுதியில் அந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்திருந்தார்.

நிக்கோலஸ் மதுரோவின் மகனான நிக்கோலஸ் மதுரோ குவேராவிற்கு எதிராகவும் அமெரிக்க அதிகாரிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், சனிக்கிழமை இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையின் போது அவர் அமெரிக்கப் படைகளிடம் சிக்கவில்லை.

வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிக்கோலஸ் மதுரோ குவேரா, வீதிகளில் இறங்கி அமெரிக்காவிற்கு எதிராகத் தமது எதிர்ப்பை வெளியிடுமாறு வெனிசுலா மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

மதுரோவும் அவரது மனைவியும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர்! | Tamil Leader | We Lead the Nation