மற்றும் போற்றும் வகையிலான பாடல்கள் அடங்கிய காணொளிகளை இணையத்தில் பதிவேற்றிய குற்றச்சாட்டின் கீழ், கிளிநொச்சி, உதயநகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாண பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (Jaffna Divisional Criminal Investigation Bureau) மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, சந்தேகநபர் கடந்த மே 31ஆம் திகதி சாவகச்சேரி, நாவற்குழி பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் பல பாடல்களைப் பாடியுள்ளார்.
குறித்த சந்தேகநபர் பின்னர் அந்தப் பாடல்களில் நான்கினைத் தொகுத்து (Edit செய்து), விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவைத் தெரிவிக்கும் வகையிலும், அவ்வமைப்பை ஊக்குவிக்கும் வகையிலும் தனது டிக்தொக் (TikTok) கணக்கில் பதிவேற்றியுள்ளதாகப் பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஜூன் 17ஆம் திகதி வரை விளக்கமறியல்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், காணொளிகளைப் பதிவேற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் அவரது கைபேசியுடன் (Mobile Phone) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதற்கமைய, சந்தேகநபரை எதிர்வரும் 2026 ஜூன் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவருக்கு எதிராக 1978 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) 03(g) பிரிவின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


