மந்தபோஷணையினால் (Malnutrition) பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த சிறுவர்கள் தங்களது இளம்பருவத்தை எட்டும்போது உடல் பருமன் அதிகரிக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய போசணை மாதத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிறுவயது மந்தபோஷணை முதிர்வயதில் உடல் பருமனாக மாறும் அபாயம்!
ஊடக சந்திப்பில் மேலும் விபரித்த அமைச்சின் செயலாளர்:
"மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, 5 வயதிற்குட்பட்ட மற்றும் 5 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களைக் கணக்கில் கொள்ளும்போது, எமது நாட்டில் மந்தபோஷணத்தினால் ஏற்படும் குள்ளத்தன்மை (Stunting) 10.1% ஆகவும், மெலிவுத்தன்மை (Wasting) 8.1% ஆகவும், குறைவிருத்தி/குறைந்த எடை (Underweight) 16.1% ஆகவும் பதிவாகியுள்ளது . அதிக எடை (Overweight) என்பது 0.5% என்ற மிகக் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகிறது. இதன் மூலம் எமது சிறுவர்களில் ஐந்தில் ஒருவர் மந்தபோஷணையால் பாதிக்கப்பட்டுள்ளமை தெளிவாகிறது.
இவ்வாறானதொரு பின்னணியைக் கொண்ட நாட்டின் சிறுவர்கள், வயதாகி இளைஞர்களாகவும் நடுத்தர வயதினராகவும் மாறும்போது உடல் பருமன் (Obesity) என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். சிறுவயதில் காணப்படும் மந்தபோஷண நிலைமையானது, பிற்காலத்தில் உடல் பருமனாக உருமாறுகின்றது. பெரியவர்களில் பெண்களில் 47% பேரும், ஆண்களில் 30% பேரும் அதிக உடல் பருமனுடன் காணப்படும் வேளையில், அது பெண்களில் 15% ஆகவும் ஆண்களில் 6% ஆகவும் (தீவிர) உடல் பருமன் நிலையை எட்டுகின்றது."
எனத் தெரிவித்துள்ளார்.


