Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

தவெக முன்னிலை, 2ஆம் இடத்தில் அதிமுக, திமுகவுக்கு 3ஆம் இடம்!

T

The Leader Desk

மே 4, 2026 • 5:42 AM

தவெக முன்னிலை, 2ஆம் இடத்தில் அதிமுக, திமுகவுக்கு 3ஆம் இடம்!  

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்களிப்பு கடந்த 23-ம் திகதி நடைபெற்ற நிலையில் இன்று காலை முதல் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.
  • தற்போதைய நிலவரப்படி தவெக 104, அதிமுக 77, திமுக 52 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.
  • தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் தொடங்கியது.
  • இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 8.30 மணிக்கு எண்ணப்பட தொடங்கியது.
எழுத்து அளவு:

தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்களிப்பு கடந்த 23-ம் திகதி நடைபெற்ற நிலையில் இன்று காலை முதல் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. 

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் காலை 9 மணி நிலவரப்படி அதிக தொகுதிகளில் விஜய் தலைமையிலான தவெக முன்னிலைப் பெற்றுள்ளது. 

தமிழக வெற்றிக் கழகத்தில் போட்டியிட்ட விஜய், செங்கோட்டையன், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, பிரபு உள்ளிட்டவர்கள் முன்னிலைப் பெற்றுள்ளனர். 

அதேநேரம், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் 31 அமைச்சர்கள் ஆரம்ப கட்டத்தில் பின்னடைவை சந்தித்துள்ளனர். இந்த எதிர்பாராத திருப்பம் திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி தவெக 104, அதிமுக 77, திமுக 52 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் தொடங்கியது.

முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 8.30 மணிக்கு எண்ணப்பட தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி தவெக: 100, அதிமுக: 80, திமுக: 53 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. முன்னிலை நிலவரப்படி அதிமுக 2-ம் இடத்திலும், திமுக 3-ம் இடத்திலும் இருக்கின்றன.

சென்னையில் 16 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் முன்னிலை. தமிழகம் முழுவதும் முதல்வர் ஸ்டாலின் உள்பட 31 அமைச்சர்கள் பின்னடைவு.
 
 
திமுக அமைச்சர்கள் பலரும் பின்னடைவு: ஷாக் கொடுத்த தவெக | தேர்தல் முடிவுகள் 2026

முன்னிலை நிலவரம் @ தமிழகம்: 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. தற்போதைய நிலவரப்படி தவெக: 100, அதிமுக: 80, திமுக: 53 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. 

புதுச்சேரி முன்னிலை நிலவரம்: புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 30 தொகுதிகள் வாக்கு எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி ஆளும் என்டிஏ கூட்டணி: 22 தொகுதிகளிலும், இண்டியா கூட்டணி: 6 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் வேட்பாளர் ரங்கசாமி வெற்றி பெற்றார்.
 

மேற்கு வங்க முன்னிலை நிலவரம்: மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. திரிணமூல் காங்கிரஸ்: 107, பாஜக: 145, காங்கிரஸ்: 3, இடதுசாரிகள்: 2 என முன்னிலை வகிக்கின்றன.

மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் 2026: பாஜக 140+ இடங்களில் முன்னிலை!

கேரளா முன்னிலை நிலவரம்: 

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்புகள் கூறிய நிலையில், தற்போதைய நிலவரப்படி ஆளும் எல்டிஎஃப் கூட்டணி: 51, யுடிஎஃப் கூட்டணி: 84, என்டிஏ கூட்டணி: 4 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.

கேரள தேர்தல் முடிவுகள் 2026 - காங்கிரஸ் கூட்டணி முன்னிலை!

அசாம் முன்னிலை நிலவரம்: 

அசாம் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. மொத்தமுள்ள 126 தொகுதிகளில் பாஜக: 94 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ்: 30, பிற கட்சிகள்: 1 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. 

4 முனைப் போட்டி: 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் இந்தமுறை 4 முனைப் போட்டி நிலவியது. புதிதாக தேர்தல் களம் கண்ட விஜய்யின் தவெக, இந்தத் தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலுக்கு முன்பு வரை தவெகவுக்கு கூடும் கூட்டமெல்லாம் வாக்காகது என்றே கணிக்கப்பட்ட நிலையில், தேர்தலுக்குப் பின்னர் தவெக ஒரு கேம் சேஞ்சர் என்ற வகையில் அணுகப்படுகிறது.

இந்த நிலையில் திமுக ஆட்சியைத் தக்க வைக்குமா?, கருத்துக் கணிப்புகளை தவிடுபொடியாக்கி அதிமுக ஆட்சி அமைக்குமா? இல்லை யாரும் எதிர்பாராத பலத்துடன் தவெக அரசியல் திருப்பத்தை ஏற்படுத்துமா? என்ற எதிர்பார்ப்புகள் நிலவிய நிலையில், தமிழகத்தில் தவெகவின் எழுச்சி பேருபொருளாகிறது. 

2 வாக்கு எண்ணும் மையங்கள்: 

தமிழகத்தைப் பொருத்தவரை, மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். மொத்தம் 5.73 கோடி வாக்காளர்களில் 4.88 கோடி பேர் வாக்களித்தனர்.

மொத்தம் 75,064 வாக்குச்சாவடிகளில், 1,06,408 வாக்குப்பதிவு இயந்திரங்கள், தலா 75,064 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

வாக்குப் பதிவு முடிந்ததும் அவை அனைத்தும் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...