Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

கடாபியின் மகன் சுட்டுக் கொலை!

T

The Leader Desk

பிப்ரவரி 4, 2026 • 5:57 AM

கடாபியின் மகன் சுட்டுக் கொலை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • லிபியாவில் நடந்த மக்கள் போராட்டத்தால் கடாபியின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
  • அப்போது மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை செய்ததற்காக கடாபியின் 2வது மகன் 53 வயதுடைய சைப் அல் இஸ்லாமுக்கு லிபியா நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
  • சைப் அல் இஸ்லாம் லிபியா தேர்தலில் போட்டியிடுவேன் என்று 2021ம் ஆண்டு அறிவித்தார்.
  • ஆனால் தேர்தல் நடத்தப்படவில்லை.
எழுத்து அளவு:

லிபியாவில் நடந்த மக்கள் போராட்டத்தால் கடாபியின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அவர் போராட்டக்காரர்களால் கொல்லப்பட்டார்.

இதனிடையே, கடாபி கொல்லப்பட்டப் பின்னர் லிபியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

அப்போது மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை செய்ததற்காக கடாபியின் 2வது மகன் 53 வயதுடைய சைப் அல் இஸ்லாமுக்கு லிபியா நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

ஆனால், தண்டனை நிறைவேற்றப்படவில்லை. சைப் அல் இஸ்லாம் லிபியா தேர்தலில் போட்டியிடுவேன் என்று 2021ம் ஆண்டு அறிவித்தார். ஆனால் தேர்தல் நடத்தப்படவில்லை.

இதையடுத்து, லிபியாவின் சிண்டான் நகரில் சைப் அல் இஸ்லாம் வசித்து வந்தார். அவரது பாதுகாப்பிற்காக பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், சைப் அல் இஸ்லாம் நேற்று வீட்டில் வைத்து மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

சிண்டான் நகரில் சைப் அல் இஸ்லாம் வசித்து வந்த வீட்டிற்குள் நேற்று மதியம் 2 மணிக்கு 4 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்துள்ளது.

அந்த கும்பல் வீட்டிற்குள் இருந்த சைப் அல் இஸ்லாமை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது.

இந்த சம்பவம் லிபியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...