குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு ஆய்வு செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிவில் சமூக ஆர்வலர் கமந்த சில்வாவினால் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ, சுனில் ஹந்துன்னெத்தி, குமார ஜயகொடி மற்றும் பிரதி அமைச்சர் சுனில் வடகல ஆகியோருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு ஏற்கனவே முறைப்பாட்டாளரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளது.
குறிப்பிட்ட அமைச்சர்கள் எவராவது தங்களது முன்னைய சொத்து வெளிப்படுத்தல்களுடன் ஒப்பிடுகையில், இக்காலப்பகுதியில் அசாதாரணமான முறையில் அதிகளவு சொத்துக்களைச் சேர்த்துள்ளனரா என்பது குறித்து ஆணைக்குழு விசாரணை நடத்தும்.


