Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

OTP, பிரமிட் மோசடிக்காரர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ‘Be Scam Proof’ திட்டம்!

T

The Leader Desk

ஜூன் 3, 2026 • 4:37 AM

OTP, பிரமிட் மோசடிக்காரர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ‘Be Scam Proof’ திட்டம்!  

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாதுகாப்பதற்கும், அவர்களின் நிதி நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்குமான தேசிய விழிப்புணர்வு வேலைத்திட்டம் ஒன்றினை இலங்கை மத்திய வங்கி இன்று (02) ஆரம்பித்துள்ளது.
  • நிதி மோசடிகள் மூலம் குடும்பங்களின் வாழ்வாதாரமும் செல்வமும் அழிவடைவது மாத்திரமன்றி, ஒட்டுமொத்த நிதி முறைமையின் மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கையும் சீர்குலைகின்றது.
  • மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி பி.
எழுத்து அளவு:

பாதுகாப்பதற்கும், அவர்களின் நிதி நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்குமான தேசிய விழிப்புணர்வு வேலைத்திட்டம் ஒன்றினை இலங்கை மத்திய வங்கி இன்று (02) ஆரம்பித்துள்ளது.

மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்கவின் தலைமையில் இந்த தேசிய விழிப்புணர்வு இயக்கம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய மத்திய வங்கி ஆளுநர், சட்டபூர்வமான நிதி நிறுவனங்கள் மற்றும் சட்டவிரோத நிதி வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு இருக்கும் போதிய அறிவின்மையையே மோசடிக்காரர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்றும், எனவே இது குறித்து பொதுமக்களை விழிப்புணர்வூட்டுவது ஒரு தேசியப் பொறுப்பாகும் என்றும் குறிப்பிட்டார்.

இலங்கை மத்திய வங்கியினால் ஒரு மாதம் முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ள இந்த “Be Scam Proof” தேசிய விழிப்புணர்வு பிரச்சார இயக்கமானது, நாட்டின் நிதி எழுத்தறிவை மேம்படுத்துவதற்கான தேசிய திட்டத்தின் ஒரு தனித்துவமான மைல்கல்லாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

"இலகுவாகப் பணம் சம்பாதிக்கும்" பொறிகளில் சிக்க வேண்டாம்!

ஆளுநர் தனது உரையில் மேலும் விபரிக்கையில்:

"தற்காலத்தில் டிஜிட்டல் வங்கிச் சேவைகள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக நிதிச் சேவைகள் மக்களை மிக நெருக்கமாகச் சென்றடைந்துள்ளன. அதற்கு இணையாக நிதி மோசடிகளுக்கான அபாயமும் அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

நிதி மோசடி என்பது இலங்கைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு பிரச்சினையல்ல. இது உலகளாவிய ரீதியில் நிலவும் ஒரு பாரிய நெருக்கடியாகும். நிதி மோசடிகள் மூலம் குடும்பங்களின் வாழ்வாதாரமும் செல்வமும் அழிவடைவது மாத்திரமன்றி, ஒட்டுமொத்த நிதி முறைமையின் மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கையும் சீர்குலைகின்றது.

விசேடமாக, அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் பிரமிட் மோசடிகள், சட்டவிரோத வைப்புத்தொகைகளைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் அதிக இலாபம் தருவதாகக் கூறி ஏமாற்றும் முதலீட்டு மோசடிகள் காரணமாக, வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளுக்கும் பெரும் முட்டுக்கட்டைகள் ஏற்படுகின்றன."

தற்போது நகர்ப்புற மக்கள் OTP (ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தும் கடவுச்சொல்) எண்களை மோசடிக்காரர்களுக்கு வழங்குவது போன்ற டிஜிட்டல் மோசடிகளில் சிக்குவதாகவும், அதேவேளை கிராமப்புற மக்கள் சட்டவிரோத பெருந்தோட்டத் திட்டங்கள் போன்ற ஏமாற்று முதலீட்டு முறைகளுக்கு பலியாவதாகவும் ஆளுநர் இங்கு வெளிப்படுத்தினார்.

கூட்டுப் பொறுப்புடன் செயல்பட வேண்டிய தருணம்!

இந்த நிதி மோசடிகளை ஒடுக்குவது என்பது மத்திய வங்கியினால் மாத்திரம் தனித்துச் செய்யக்கூடிய காரியமல்ல என்றும், அதற்காக ஊடக நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் மற்றும் சட்ட அமலாக்க முகவர் அமைப்புகள் இணைந்து செயலாற்ற வேண்டும் என்றும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

விசேடமாக சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் (Influencers) மற்றும் உள்ளடக்க உருவாக்குநர்கள் (Content Creators) பொதுமக்கள் தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்தாமல், பொறுப்புணர்வுடன் மக்களை நல்வழிப்படுத்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

பல்வேறு ஊடகங்கள் ஊடாக விழிப்புணர்வு

இந்த “Be Scam Proof” இயக்கத்தின் கீழ் சுவரொட்டிகள், குறும்படங்கள் மற்றும் ஒரு பிரத்யேக தீம் பாடல் உள்ளிட்ட பரந்தளவிலான பன்முக ஊடகப் பிரச்சாரங்களை முன்னெடுக்க மத்திய வங்கி திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் கிராமப்புற மக்கள், சிரேஷ்ட பிரஜைகள் மற்றும் இளைய தலைமுறையினரை நிதி ரீதியாக வலுவூட்ட எதிர்பார்க்கப்படுகிறது.

தங்களது நிதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, சந்தேகத்திற்குரிய எந்தவொரு நிதிப் வாக்குறுதிகள் குறித்தும் கேள்வி எழுப்புமாறும், எதனையும் நம்புவதற்கு முன்னர் அதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துமாறும் மத்திய வங்கி ஆளுநர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

இந்த விழிப்புணர்வு நடவடிக்கையானது ஒரு மாதத்திற்குள் மட்டும் மட்டுப்படுத்தப்படாமல், எதிர்காலத்தில் உருவாகும் புதிய தொழில்நுட்ப அச்சுறுத்தல்களுக்கு ஏற்ப தொடர்ச்சியாக முன்னோக்கி கொண்டு செல்லப்படும் என்றும் அவர் மேலும் உறுதியளித்தார்.

பிரமுகர்களின் பங்கேற்பு

இவ்விழாவில் இலங்கை மத்திய வங்கியின் உதவி ஆளுநர் டபிள்யூ.ஏ. தில்ருக்ஷினி வரவேற்புரையை நிகழ்த்தியதுடன், தகவல் தொடர்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி ஹேமந்தா ஏகநாயக்க நன்றியுரையை ஆற்றினார்.

இந்நிகழ்வில் இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர், பிரதி ஆளுநர்கள், திணைக்களத் தலைவர்கள், பாதுகாப்புப் பிரிவினர், வங்கி மற்றும் நிதித்துறை சார்ந்த பிரமுகர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

OTP, பிரமிட் மோசடிக்காரர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ‘Be Scam Proof’ திட்டம்! | Tamil Leader | We Lead the Nation