அதன்படி, WTI மசகு எண்ணெய் பெரல் ஒன்றின் விலை 101.9 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதுடன், Brent மசகு எண்ணெய் பெரல் ஒன்றின் விலை 108.2 அமெரிக்க டொலர்களாகவும் பதிவாகியுள்ளது.
இதற்கு மேலதிகமாக, Murban மசகு எண்ணெய் பெரல் ஒன்றின் விலை 103.8 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பாவுக்கான விநியோகங்களை விரைவுபடுத்தியதன் மூலம் வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெனிசுலாவின் ஏப்ரல் மாத எண்ணெய் ஏற்றுமதி நாளொன்றுக்கு 1.23 மில்லியன்பெரல்கள் வரை உயர்ந்துள்ளது. இது 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த அளவாகும் என அந்த ஊடக அறிக்கைகள் மேலும் தெரிவிக்கின்றன.
இலங்கையில் அனைத்து எரிபொருட்களின் விலைகளும் மீண்டும் அதிகரிப்பு
உலகச் சந்தையில் விலை வீழ்ச்சி அடைந்துள்ள போதிலும், நேற்று (மே 02) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து வகை எரிபொருட்களின் விலைகளையும் அதிகரிப்பதற்கு இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனம் (CEYPETCO) நடவடிக்கை எடுத்துள்ளது.
விலை அதிகரிப்பின் விபரங்கள் பின்வருமாறு:
-
லங்கா வெள்ளை டீசல்: ஒரு லீற்றரின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 392 ரூபாவாகும்.
-
சூப்பர் டீசல்: ஒரு லீற்றரின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 458 ரூபாவாகும்.
-
ஒக்டேன் 95 பெற்றோல்: ஒரு லීற்றரின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 470 ரூபாவாகும்.
-
ஒக்டேன் 92 பெற்றோல்: ஒரு லீற்றரின் விலை 12 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 410 ரூபாவாகும்.
- லங்கா மண்ணெண்ணெய்: ஒரு லீற்றரின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
IOC எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு
இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம், நேற்று (02) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளை அதிகரித்ததைத் தொடர்ந்து, லங்கா இந்தியன் ஒயில் நிறுவனமும் (LIOC) தனது விலைகளை அதிகரித்துள்ளது.
இதன்படி, லங்கா ஓட்டோ டீசல் (Auto Diesel) மற்றும் 92 ஒக்டேன் பெட்ரோல் ஆகியவற்றின் விலைகள் மாத்திரம் திருத்தப்பட்டுள்ளதாகவும், ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்கள் இல்லை எனவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
புதிய விலை விபரங்கள்:
-
லங்கா ஓட்டோ டீசல்: ஒரு லீற்றரின் புதிய விலை 392 ரூபா.
-
92 ஒக்டேன் பெற்றோல்: ஒரு லீற்றரின் புதிய விலை 410 ரூபா.
ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யாமல் இருக்க லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.


