Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

'புலிகள் நடத்திச்சென்ற சித்திரவதை முகாம்களை பிள்ளையான் கணக்கில் சேர்க்க முயற்சி!'

T

The Leader Desk

ஏப்ரல் 3, 2026 • 5:13 AM

'புலிகள் நடத்திச்சென்ற சித்திரவதை முகாம்களை பிள்ளையான் கணக்கில் சேர்க்க முயற்சி!'   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவேன் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
  • அதேபோல் அவர் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரை கடத்தி காணாமலாக்கிய சம்பவம் தொடர்பான விடயங்களும் நீதிமன்றத்துக்கு முன்னிலைப்படுத்தப்பட்டது.
  • பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வருடமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையான் நேற்று வியாழக்கிழமை கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
எழுத்து அளவு:

உத்தரவை ஏற்க முடியாது. இந்த உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவேன் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வருடமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையான் நேற்று வியாழக்கிழமை கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் முன்னிலைப்படுத்தப்பட்டார். இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பிள்னையானை கைது செய்து விசாரணைகளை மேற்கொள்வதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்ட விடயம் பொய் என்பது ஒரு வருடத்துக்கு பின்னர் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு வருட காலமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். ஆனால் அவர் மீது உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் எவ்வித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படவில்லை.

பிள்ளையான் விடுதலை புலிகளுக்கு எதிராக செயற்பட்டமை தவறு. இராணுவத்தில் இணையாமல் அவர் ஆயுதமேந்தி விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட்டமை சட்டவிரோதமானது என்றே குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்துக்கு விடயங்களை முன்வைத்தார்கள்.

அதேபோல் அவர் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரை கடத்தி காணாமலாக்கிய சம்பவம் தொடர்பான விடயங்களும் நீதிமன்றத்துக்கு முன்னிலைப்படுத்தப்பட்டது.

காணாமலாக்கப்பட்ட உபவேந்தர் விவகாரத்தில் பிள்ளையானை கைது செய்ய முடியாது. ஆகவே அவரை விடுதலை செய்யுமாறு நாங்கள் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்தோம்.

பிள்ளையான் சார்பில் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைகளை கோரும் வரையில் பிள்ளையானை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்கிசை நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ஏற்க முடியாது. இந்த உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவேன்.

விடுதலை புலிகள் அமைப்பு நடத்திச் சென்ற சித்திரவதை முகாம்களை பிள்ளையான் கணக்கில் சேர்ப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் முயற்சிக்கிறது. இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...