Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

உணவுப் பாதுகாப்பின்மை நெருக்கடிக்குள் சிக்கும் நிலையில் இலங்கை!

T

The Leader Desk

ஏப்ரல் 3, 2026 • 5:07 AM

உணவுப் பாதுகாப்பின்மை நெருக்கடிக்குள் சிக்கும் நிலையில் இலங்கை!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஸ்திரத்தன்மையை சிதைப்பதுடன், நாட்டை உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் உயர் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்குள் தள்ளும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
  • இதனால், இலங்கைக்கு, இறக்குமதி செய்யப்படும் எரிபொருள், உரம் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களில் பாதிப்பு ஏற்படக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
  • சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுகள் நிலைய ஆய்வாளர் ரஜினி கமகே வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

ஸ்திரத்தன்மையை சிதைப்பதுடன், நாட்டை உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் உயர் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்குள் தள்ளும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுகள் நிலைய ஆய்வாளர் ரஜினி கமகே வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு, போரின் விளைவாக ஹோர்முஸ் நீரிணையை மையப்படுத்தியிருந்த உலகளாவிய எரிபொருள் விநியோகச்சங்கிலி மற்றும் கப்பல் போக்குவரத்துப்பாதை என்பவற்றில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.

இதனால், இலங்கைக்கு, இறக்குமதி செய்யப்படும் எரிபொருள், உரம் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களில் பாதிப்பு ஏற்படக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை பதற்றங்களுக்கு மத்தியில், உணவுப்பொருட்களில் விலையேற்றத்தினால் வெகுவாகப் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலைமை நாட்டின் பேரண்டப்பொருளாதார ஸ்திரத்தன்மையை சிதைக்கும் அபாயத்தைக் கொண்டிருப்பதுடன், நாட்டை உணவுப்பாதுகாப்பின்மை மற்றும் உயர் வாழ்க்கைச்செலவு நெருக்கடிக்குள் தள்ளக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அத்துடன், மத்திய கிழக்கு, போர் தொடரும் பட்சத்தில் வாழ்க்கைச்செலவு மேலும் அதிகரிக்கும் என்றும், ஏற்கனவே இலகுவில் பாதிக்கப்படக்கூடிய நலிவுற்ற நிலையில் உள்ள மக்கள் மத்தியில் இந்த அழுத்தங்கள் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்றும் தெற்காசிய ஆய்வுகள் நிலைய ஆய்வாளர் ரஜினி கமகே தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...