செலவிட வேண்டிய குறைந்தபட்சத் தொகை 17,117 ரூபா வரை அதிகரித்துள்ளது.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் ஏப்ரல் மாதத்திற்காக வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டு விபரங்களின் அடிப்படையிலேயே இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டின் பெறுமதி 427 ரூபாவினால் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டின் பெறுமதி 16,690 ரூபாவாகப் பதிவாகியிருந்தது.
ஒரு நபர் தனது அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்காக மாதாந்தம் மேற்கொள்ள வேண்டிய குறைந்தபட்ச செலவினம் இந்த உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டின் மூலமே மதிப்பிடப்படுகின்றது.
மாவட்ட ரீதியிலான விபரங்கள்!
ஏப்ரல் மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டின் தரவுகளுக்கு அமைவாக, நாட்டின் மாவட்ட ரீதியிலான செலவின விபரங்கள் வருமாறு:
-
அதிகூடிய செலவு (கொழும்பு மாவட்டம்): நாட்டின் மிகக் கூடிய மாதாந்த குறைந்தபட்ச வாழ்க்கைச் செலவு கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அது 18,461 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
-
குறைந்தபட்ச செலவு (மொனராகலை மாவட்டம்): வறுமைக் கோட்டின் தரவுகளின்படி மிகக் குறைந்த மாதாந்த செலவு மொனராகலை மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அது 16,367 ரூபா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


