Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

தமிழ்த் தேசிய கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சி: அடுத்த வாரமும் சந்திப்பு!

T

The Leader Desk

ஏப்ரல் 2, 2026 • 5:24 AM

தமிழ்த் தேசிய கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சி: அடுத்த வாரமும் சந்திப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த நிலைப்பாட்டை எட்டும் நோக்கில், தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரண்டாவது சந்திப்பு அடுத்த வாரத் தொடக்கத்தில் நடைபெறவுள்ளது.
  • இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளை ஒன்றிணைத்து, கடந்த 2 ஆம் திகதி கொழும்பில் முதலாவது சந்திப்பு நடைபெற்றது.
  • இதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தையை கடந்த 19 ஆம் திகதி நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.
  • இந்தச் சூழலில், தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையின் ஒருங்கிணைப்பாளர்களான க.ச.
எழுத்து அளவு:

தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த நிலைப்பாட்டை எட்டும் நோக்கில், தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரண்டாவது சந்திப்பு அடுத்த வாரத் தொடக்கத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளை ஒன்றிணைத்து, கடந்த 2 ஆம் திகதி கொழும்பில் முதலாவது சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது, சமஷ்டி முறையிலான அரசமைப்புக்கான சமூக ஒப்பந்தமொன்றைத் தயாரித்தல் மற்றும் இனப்பிரச்சினைத் தீர்வில் தனித்துக் செயற்படுவதில்லை போன்ற முக்கிய இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தையை கடந்த 19 ஆம் திகதி நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட நெருக்கடி நிலைகள் காரணமாக அச்சந்திப்பு திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்தச் சூழலில், தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையின் ஒருங்கிணைப்பாளர்களான க.ச. இரத்தினவேல், வி.புவிதரன், பேராசிரியர் அ. சர்வேஸ்வரன், சுகந்தி இராஜகுலேந்திரா, வ.ச.நிறைஞ்சன், ஞா.க. ரனித்தா மற்றும் ம. யூட் டினேஷ் ஆகியோர் ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் கூடி இது குறித்து ஆராயவுள்ளனர்.

சம்பந்தப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளின் வசதியைப் பொறுத்து, இந்த இரண்டாவது தீர்க்கமான சந்திப்பு அடுத்த வாரத் தொடக்கத்தில் நடைபெறுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகத் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...