(03) காலை 8.00 மணி வரை 24 மணித்தியால அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளது.
சட்டவிரோதமான இடமாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாட்டிலுள்ள அனைத்து அரசாங்க வைத்தியசாலைகளிலும் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதே பிரச்சினைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த செவ்வாய்க்கிழமை அன்றும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் 24 மணித்தியால அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தது.
எவ்வாறாயினும், தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காத காரணத்தினால் இன்றைய தினமும் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.
இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு காலப்பகுதியில் அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகள் (Emergency and Essential Services) முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


