போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விருப்ப மனுக்கள் பெறுதல், நேர்காணல், வாக்குறுதிகள், பரபரக்கும் பிரச்சாரங்கள் ஆகியவற்றால் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் தவெக கட்சியின் 3 ஆம் ஆண்டு தொடக்க விழா பனையூர் தவெக அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. பனையூருக்கு தற்போது விஜய் வருகை புரிந்து கொள்கைத் தலைவர்களுக்கு மரியாதை செலுத்து, கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார்.
த.வெ.க 3ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கட்சியின் தலைவர் விஜய் தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு,
வணக்கம்.
நம் உயிரனைய இயக்கமான தமிழக வெற்றிக் கழகத்தின் மகிழ்ச்சிகரமான மூன்றாம் ஆண்டு, இன்று (02) தொடங்குகிறது. இரண்டு ஆண்டுகளை இயல்பாகவும், இயல்பு தாண்டியும் நிறைவு செய்து, நீள்கிறது நம் அரசியல் பெரும்பயணம்.
முதன்மை அரசியல் சக்தியாகப் பரிணமிக்கும் முன்பே மக்கள் இயக்கமாக, மக்களோடு மக்களாகக் கலந்து நின்றவர்கள் நாம். இதை நாடறியும். நல்லவர்கள் அறிவார்கள்.
ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். சலனங்களைப் புறந்தள்ளி, சமநிலை தவறாத, அளக்கவியலாத ஆழ்கடல் த.வெ.க, எவராலும் விலக்க இயலாத விரிவானம் த.வெ.க, அத்தனை இலக்குகளையும் அர்ப்பணிப்புடன் வெல்லும், சாமானிய மக்களுக்கான அதிகார அரசியலின் வெற்றிப் போர்முரசம் த.வெ.க.
2026 சட்டமன்றத் தேர்தல் களம், இதுவரை இல்லாத புதிய சூழலைச் சுமந்து நிற்கிறது. இதற்கு ஒரே காரணம் நமது அரசியல் வருகை மட்டுமே என எல்லோரும் சொல்கின்றனர். எனவே இச்சூழலில், களத்தை நமதாக்கி, தேர்ந்த தெளிவுடனும் திறன்மிக்க நுட்பத்துடனும் தேர்தல் அரசியல் வெற்றியின் வாயிலாக, அதிகார அரசியல் அங்கீகாரம் நோக்கிச் செல்வோம். அனைத்து மக்களின் அமோக ஆதரவுடன், தீர்க்கமுடன் ஒற்றுமையாகக் களமாடி, ஆட்சி பீடத்தைக் கைக்கொள்ளும் ஜனநாயக இலக்கை உறுதியாக வெல்வோம்.
நல்லதே நடக்கும்.
வெற்றி நிச்சயம்.
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலுக்காக தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுகவை அரசியல் எதிரியாகவும், பாஜகவை கொள்கை எதிரியாகவும் கூறி ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று அறிவித்த அதிரடியாக அரசியலில் என்ட்ரி கொடுத்தார் தவெக தலைவர் விஜய். ஜனநாயகன் படத்துடன் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட போவதாகவும் அவர் கூறியிருந்தார்.
கடந்த 2024 கட்சி தொடங்கப்பட்ட நிலையில் தொடக்க மாநாடு விக்கிரவாண்டியிலும், இரண்டாம் ஆண்டு மாநாடு மதுரையில் கடந்த வருடமும் நடைபெற்றது. தொடர்ந்து விஜய் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டது. ஆனால் 3வது வாரத்திலேயே கரூர் தவெக நிகழ்வில் எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதில் 41 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு விஜய் மற்றும் தவெகவின் செயல்பாட்டில் சுணக்கம் ஏற்பட்டது. விஜய் வெளியில் தலை காட்டுவது அரிதிலும் அரிதாகிவிட்டது. கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ வழக்கு விசாரணை, ஜனநாயகன் படம் வெளியிட தடை ஆகியவற்றால் விஜய் மிகுந்த நெருக்கடியில் உள்ளார்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று அறிவித்தும் அவர்களுடன் தற்போதுவரை எந்தக் கட்சியும் கூட்டணியில் இணையவில்லை. தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் கிட்டத்தட்ட கூட்டணியை இறுதி செய்துவிட்டன. மற்ற கட்சிகளை விட தவெகவினர் தேர்தல் பணியில் மந்தமாக உள்ளனர். இந்நிலையில் தவெகவின் 3 ஆம் ஆண்டு தொடக்க விழா பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பனையூரே களைகட்டியுள்ளது.
இதில் விஜய் மற்றும் தவெகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ளவுள்ளனர். விஜய் தற்போது பனையூருக்கு வருகை புரிந்துள்ளார். கொள்கைத் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தி, கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.
தேர்தலுக்கு மிகவும் குறுகிய காலமே உள்ள நிலையில் விஜய்யின் இன்றைய பேச்சிலாவது சர்ப்ரைஸ் அறிவிப்புகள் வெளியாகுமா என்கிற எதிர்பார்ப்பில் தவெகவினர் உள்ளனர். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கும் அவர் பதில் அளிப்பார் என்று கூறப்படுகிறது.


